பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல்.. ஏலியனா என ஆராய 650 கோடி கொடுக்கும் தொழிலதிபர்
பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்.
Recommended Video

மாஸ்கோ: பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த விண்கல் சரியாக ஒரு வாரத்திற்கு முன் பூமிக்கு அருகில் வந்தது.
இன்னும் இந்த விண்கல் பூமியை முழுதாக தாண்டி செல்லாத நிலையில் தற்போது இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய அந்த ரஷ்ய தொழிலதிபர் முடிவு செய்து இருக்கிறார்.
அந்த விண்கலத்தில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.

வித்தியாசமான விண்கல்
சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருக்கிறது.

ஆராய்ச்சி
இந்த நிலையில் இந்த விண்கலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன்படி இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு 'ஒமுஅவுமா' என்று பெயர் வைத்தார்கள். மேலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கினார்கள். மேலும் இந்த விண்கல் இன்னும் சில தினங்களில் மொத்தமாக பூமியை கடந்து சென்றுவிடும் என்பதால் இதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

என்ன இருக்கிறது
தற்போது அதன் உள்ளே ஏலியன் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் 'யூரி மில்னர்' 650 கோடி பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்த இருக்கிறார். அதன்படி 30க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இந்த விண்கலம் பூமியை கடந்து செல்வதற்கு முன் அதை ஆராய்ச்சி செய்து முடித்து இருப்பார்கள். அதற்குள் ஏலியன் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த முயற்சி செய்யப்படுகிறது.

எப்படி ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சிக்காக அந்த விண்கலத்திற்கு சில சிக்னல்கள் அனுப்பப்படும். அந்த சிக்னல்களுக்கு பதில் வரும் பட்சத்தில் அதற்குள் ஏலியன் இருப்பது உறுதியாகும். ஆனாலும் இந்த ஆராய்ச்சி தேவையில்லாத செலவு என்றும் ரஷ்யாவை சேர்ந்த அறிஞர்கள் சிலர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications