பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 ஆக பதிவு.. அதிகாலையிலேயே அலறிய மக்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் திடீரென இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுக்கள் அச்சமடைந்து தெருவில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 170 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.43 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை. இதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications