தங்கை அழகு மீது பொறாமை.. கண்களை பிடுங்கி, காதுகளை அறுத்து 140 முறை குத்தி கொன்ற கொடூர அக்கா
ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியை பொறாமையால் அக்காவே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியை அக்காவே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கை அழகான மாடலாக இருப்பதை பொறுக்க முடியாமல் பொறாமையில் அவரின் கண்களை பிடுங்கியும் காதுகளை அறுத்தும் கொன்றுள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெஃபானியா டுப்ரோவினா. 17 வயதான இவர் மாடல் அழகியாக உள்ளார்.
இந்நிலையில் அவரை யாரோ கொலை செய்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் ஸ்டெஃபானியா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கண்களை பிடுங்கி, காதுகளை அறுத்து
காரணம் அவரது கண்கள் தோண்டப்பட்டு காதுகள் அறுக்கப்பட்டு, உடல் முழுவதும் கத்தியால் குத்தி சிதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் கொன்றதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

தங்கை அழகில் பொறாமை
அப்போது ஸ்டெஃபானியாவின் அக்காவுக்கு தனது தங்கை மேல் பொறாமை இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் சம்பவத்தன்று தனது தங்கை மற்றும் நண்பர் ஒருவர் என 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதாக மாடல் அழிகியின் அக்கா எலிஸாவெட்டா கூறியுள்ளார்.

140 முறை கத்தியால் குத்தி..
மது தீர்ந்தவுடன் நண்பர் வாங்கச்சென்றார். அப்போது கதவை மூடி விட்டு தனது தங்கையை 140 முறை முகம் உட்பட உடல் முழுவதும் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

பொறாமையால் கொன்றேன்
மேலும் கண்களை தோண்டி எடுத்ததையும் ஒப்புக் கொண்ட அவர், தனது தங்கையின் கண்களும் முடியும் அழகாக இருக்கும். அவர் தனது மேக் அப் மற்றும் அழகால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் ஏற்பட்ட பொறாமையால் அவரைக் கொன்றதாக எலிஸாவெட்டா கூறியுள்ளார்.

போலீசார் அதிர்ச்சி
எலிஸாவெட்டாவின் வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினரிம் எலிஸாவெட்டாவின் வாக்குமூலம் ரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது என அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

போலீஸ் கஸ்டடியில்
போதையில் எலிஸாவெட்டா தனது தங்ககையை கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார் தங்களின் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications