நிக்காம ஓடு... ஓடு... கிடைத்த கேப்பில் சர்க்கஸ் கூண்டை திறந்து தப்பித்த புலி
சீனாவில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் மக்கள் கூட்டமாக இருந்த போது புலி ஒன்று தப்பித்து வெளியே சென்று இருக்கிறது.
Recommended Video

பெய்ஜிங்: சீனாவில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் மக்கள் கூட்டமாக இருந்த போது புலி ஒன்று தப்பித்து வெளியே சென்று இருக்கிறது. கூண்டுக்குள் இருந்த அந்த புலி சரியாக யாரும் கவனிக்காத நொடியில் கூண்டைவிட்டு வெளியே சென்று இருக்கிறது.
இந்த புலி வெளியே சென்றது மட்டும் இல்லாமல் உடனடியாக மக்களை தாக்கவும் தொடங்கி இருக்கிறது. இதனால் குழந்தைகளும் பெரியவர்களும் காயம் அடைந்து இருக்கின்றனர்.
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அந்த புலியின் செயலும் அங்கு இருந்த மக்களின் செயலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தப்பித்த புலி
சீனாவில் 'லின்பஃன்' என்ற பகுதியில் தற்போது நிறைய விழாக்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அங்கு இந்த வருடத்தில் மிகப்பெரிய அளவில் சர்க்காஸ் ஒன்று போடப்பட்டு இருக்கிறது. நேற்று இந்த சர்க்கஸுக்கு மக்கள் வந்த நேரம் பார்த்து கூண்டுக்குள் இருந்த புலி ஒன்று தப்பித்து இருக்கிறது. கூண்டுக்குள் இருந்த காவலாளியை ஏமாற்றி விட்டு கிடைத்த கேப்பில் வெளியே சென்று இருக்கிறது.
|
மக்களை தாக்கியது
வெளியே வந்த இந்த புலி உடனடியாக மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. மேலும் அங்கு இருந்த மக்கள் அனைவரையும் தாக்க தொடங்கியது. காவலாளிகள் அந்த புலியை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் முழித்து இருக்கின்றனர். மேலும் புலியின் பயிற்சியாளர் இல்லாத காரணத்தால் அந்த புலி யார் பேச்சையும் கேட்காமல் அனைவரையும் தாக்கி இருக்கிறது.

மக்கள் படுகாயம்
இந்த சம்பவம் காரணமாக இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேரும் 10 வயது கூட நிரம்பாத பள்ளிக் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த இடத்திற்கு தாமதமாக வந்த புலியின் பயிற்சியாளர் அந்த புலியை பிடிக்க முயன்றார். முதலில் அவரின் பேச்சை கேட்காத புலி பின் அவரிடம் வந்து சரண் அடைந்தது.
|
வைரல்
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. பலரும் இந்த வீடியோவுக்கு காமெடியாக கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் அந்த புலிக்கு சாதகமாகவும் பேசியுள்ளனர். அதில் ''ஒரு கொடூரமான புலியை கூண்டுக்குள் அடைத்து வைத்தால் அது அப்படித்தான் செய்யும். புலி எப்படி இருந்தாலும் தப்பிக்கத்தான் முயற்சி செய்யும். புலியை அடைத்து வைப்பது தவறான செயல்'' என்று இவர் கூறியுள்ளார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications