ஆட்டத்தையே மாற்றும் யுக்தி.. இஸ்ரேல் படைகளை குறி பார்த்து ட்ரோன் அட்டாக் செய்யும் ஹமாஸ்.. வீடியோ
இஸ்ரேல்: இஸ்ரேல் மீது இன்று அதிகாலை காசாவின் ஹமாஸ் படையினர் ஏவுகணை வீசி தாக்குதலில் ஈடுபட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்த காட்சிகளை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் வரலாறு மோதலிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. அதாவது யூத இனத்தை சேர்ந்த தியோடர் ஹெஸில் என்பவர்தான் ஜியோனிஸம் எனும் சித்தாந்தத்தை உருவாக்கியவர். இதன் நோக்கம் யூத மக்களுக்கு என ஒரு தனி நாடு வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் பாலஸ்தீனத்தை தேர்ந்தெடுத்து அப்போதைய அரபு நாட்டின் ஆட்சியாளர்களிடம் இது தொடர்பான விருப்பத்தை கூறினார். ஆனால், அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படியே காலங்கள் செல்ல, இவருக்கு பின் வந்தவர்கள் இதே கோரிக்கையை முன் வைக்க, பிரிட்டன் இந்த கோரிக்கையை ஏற்று யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்திருக்கிறது. பிரிட்டனின் இந்த வழிமுறையை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள, அரபு நாடுகள் மறுதலித்தன. ஆனால் பிரிட்டனிடம் இருந்த படைகள் வலுவாக இருந்தால் அப்போதைக்கு சிறு சிறு எதிர்ப்புகளோடு இந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால் பிரிட்டன் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் இஸ்ரேலுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக 1947ம் ஆண்டு ஐநா பாலஸ்தீனத்தை மூன்றாக பிரித்தது. இங்குதான் பஞ்சாயத்து மீண்டும் வெடித்து கிளம்பியது.
The footage shows Palestinian Resistance forces dropping bombs on Zionist soldiers by drone. #IsraeliCrimes #Palestine pic.twitter.com/fEwNxMikgO
— IRNA News Agency (@IrnaEnglish) October 7, 2023
அதாவது, பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 56% யூதர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை அப்போது வெறும் 30%தான். இதே 70% என பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு 43% நிலப்பரப்புதான் ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே எங்கள் மண்ணில் ஆக்கிரமிப்பு செய்துவிட்டீர்கள், இப்போது பாக பிரிவினையிலும் ஒருதலைபட்சமா? என கேள்வியெழுப்பி பாலஸ்தீனம் சண்டை செய்ய தொடங்கிவிட்டது.

இந்த பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.
இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று காலை ஹமாஸ், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ராக்கெட்களை ஏவி இஸ்ரேலை நிலைகுலைய செய்துள்ளது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொரு புறம் ஜீப் மூலம் இஸ்ரேலின் தடுப்புகளை மீறி அந்நாட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர்.

இப்படி நுழைந்தவர்கள் 53 இஸ்ரேலியர்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றிருக்கின்றனர். அதில் இஸ்ரேலிய சிறப்பு படையின் எதிரிகளை ஆழ ஊடுருவும் படை பிரிவின் கட்டளைத் தளபதியான நிர்மோத் அலோனியும் ஒருவர். இப்படி இருக்கையில் இஸ்ரேல் படையை குறி வைத்து தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் தொடர்பான வீடியோவை ஹமாஸ் ஷேர் செய்திருக்கிறது. இப்படியாக இவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 40 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 750 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications