இறப்பு சான்றிதழ் தராமல் அழைக்கழிப்பு... வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்ட குழந்தையின் உடல்
பெரு நாட்டில் இறப்பு சான்றிதழ் இல்லாததால் இறந்து போன குழந்தையின் உடல் பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

லீமா: பெரு நாட்டில் இறப்பு சான்றிதழ் இல்லாததால் இறந்து போன குழந்தையின் உடல் பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருக்கிறது. சரியாக ஒருவாரமாக அந்த குழந்தையின் உடல் வீட்டில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
குழந்தையின் தாயே இந்த செயலை செய்து இருக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்தின் மோசமான செயல்பாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அந்த குழந்தையின் உடலை வெளியே அனுப்ப வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இறந்து போன குழந்தை
பெரு நாட்டின் லீமா என்ற பகுதியை சேர்ந்த 'மோனிகா பலோமினா' என்ற பெண்ணுக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்து இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை பிறக்கும் போதே சரியான வளர்ச்சி இல்லாமல் பிறந்துள்ளது. இதன்காரணமாக அந்த குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். ஆனால் பிறந்த 24 மணிநேரத்தில் அந்த குழந்தை மரணம் அடைந்துள்ளது.

மருத்துவமனையில் கொடுமை
இந்த நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் படி கூறியிருக்கிறது. குழந்தை இறந்து 2 மணிநேரம் கூட அந்த பெண் மருத்துவமனையில் வைக்கப்படவில்லை. மருத்துவமனையில் இடம் இல்லை என்று பொய் காரணம் கூறப்பட்டு உள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழும் கொடுக்கப்படவில்லை.

பிரிட்ஜில் குழந்தை
இதையடுத்து அந்த குழந்தையை இறப்பு சான்றிதழ் வரும் வரை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் அந்த பெண் குழம்பி இருக்கிறார். எனவே வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருக்கும் பிரீசரில் குழந்தை வைத்துள்ளார். மேலும் அதன் கதவுகளில் ''இந்த கதவை தொடாதீர்கள்'' என்று எழுதியுள்ளார். அந்த குழந்தை 5 நாட்களாக அதே இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது.

விளக்கம்
தற்போது இதுகுறித்து சரியான விசாரணை நடத்தப்படும் என்று அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் "இந்த சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம்தான் முழு பொறுப்பு. அந்த பெண் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். குழந்தையை எடுக்கவில்லை என்றால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். மோசமாக நடந்த மருத்துவமனை பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications