மீண்டும் கார் ரேஸில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார்.. முன்பக்கம் பலத்த சேதம்.. என்ன நடந்தது?
ரோம்: இத்தாலியில் கார் ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஸின் போது டிராக்கில் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால், அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் குமார் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு ரஜினி, கமல்ஹாசன் கோலோச்சினர். இதற்கு அடுத்தபடியாக விஜய், அஜித் தான் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நடிகர் அஜித் குமார்
அஜித் குமார் கார் ரேசிலும் ஈடுபட்டு வருகிறார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, அவ்வப்போது கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபடுகிறார். அஜித் குமார் ரேஸ் கிளப் ஒன்றை உருவாக்கியுள்ள அவர், வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்த பிறகே அவர் கார் ரேசில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த படம் என்ன என்று இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் மீண்டும் அஜித்குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே தான் அஜித் குமார், தற்போது இத்தாலியில் கார் ரேஸ் போட்டியில் ஈடுபட்டுள்ளார். நேற்று இவரது அணி 3 ஆம் இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது.
கார் விபத்தில் சிக்கியது
இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். நேற்று அவரது அணி 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று நடந்த ரேஸ் போட்டியில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. அஜித்குமார் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று பழுதாகி நின்ற நிலையில் அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதியது.
எந்த காயமும் ஏற்படவில்லை
எனினும் நடிகர் அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்தது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் ரேஸிங் தொடங்கிய அரை மணி நேரத்தில் டிராக்கில் முன்னால் சென்ற கார் பழுதாகி நின்றதால், அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வளைவில் திரும்பும் போது நின்றிருந்த கார் மீது மோதுகிறது.
இதில் அஜித்குமார் காரின் இடதுபுறத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. இதையடுத்து டிராக்கில் இருந்து அந்த கார்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. காரில் இருந்து வெளியே வந்த நடிகர் அஜித்குமார் காரின் உடைந்து கிடந்த பாகங்களை ஒன்றாக எடுத்து போட்டார். அஜித்குமார் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
முன்னதாக ஏற்கனவே இதேபோன்று அஜித் குமார் கார் ரேஸின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. துபாயில் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இவரது கார் வளைவில் திரும்ப முயன்ற போது தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் இரண்டு மூன்று முறை தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் நல்வாய்ப்பாக அஜித்குமாருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது அஜித் குமார் கார் விபத்தில் சிக்கிய நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications