'ட்ரீம் கேர்ல்' துபாயில் வெளியிடப்பட்ட ஹேமமாலினியின் ஆங்கில நூல்!
துபாயில் நடிகை ஹேமமாலினியின் டிரீம் கேர்ஸ் என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
துபாய் : துபாயில் நடிகை ஹேமமாலினியின் ட்ரீம் கேர்ல் என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு நடிகை ஹேமமாலினி வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார். ஹேமமாலினி மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியானது இந்தியாவின் 70-வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார்.

அதனைத் தொடர்ந்து நடிகை ஹேமமாலினி தனது டிரிம் கேர்ல் என்ற நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களது விருப்பம் போல் படிக்க வைக்க வேண்டும். தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பிள்ளைகளை படிக்க வைக்க கட்டாயமாக்க கூடாது.
மேலும் மதுரா தொகுதியில் பொதுமக்களுக்காக கழிவறைகளை கட்டியுள்ளேன். சில நாட்கள் கழித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தேன். அந்த கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

இது குறித்து அந்த பகுதி மக்களிடம் விசாரித்த போது கழிவறைகளை பயன்படுத்தி காலைக் கடன்களை செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. இயற்கையாக காலைக் கடன்களை செலுத்தி பழக்கப்பட்ட எங்களுக்கு, இதனால் காலைக் கடனை செலுத்த கழிவறைகளில் முடியவில்லை என கூறியது அதிர்ச்சியளித்தது. இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதி காவலர் ராமமூர்த்தி, வர்த்தக பிரமுகர் சையது அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஷார்ஜாவில் நடந்த 36-வது சர்வதேச புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை ஹேமமாலினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications