தாலிபான்கள் வர்றாங்க.. அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மாயம்.. ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?
ஆப்கானிஸ்தானில் ஒப்படைக்கப்பட்ட 2 மாத குழந்தை தற்போது மாயமாகி உள்ளது
காபூல்: காபூல் ஏர்போர்ட்டில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை ஒன்று மாயமாகி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை, தாலிபன்கள் கைப்பற்றியதுமே அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. நாட்டு மக்களிடையே ஒருவித பதட்டமும், பயமும், பீதியும், அச்சமும், பற்றி கொண்டது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறினர்.. காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்..

வீடியோக்கள்
அப்போது அவர்களின் இன்னல்கள், அவதிகள், வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் வெளிவந்தன.. பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி தந்த அன்றே, பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகின. ஏர்போர்ட்டில் தாலிபான்கள் தாக்க தொடங்கியதுமே, எப்படியாவது தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குழந்தைகளை ராணுவ வீரர்களிடம் தாய்மார்களே வீசினர்..

முள்வேலி
காபூல் ஏர்போர்ட்டை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருந்தால், அந்த முள்வேலிக்கு வெளியே ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றுவதற்காக, அவர்களை முள்வேலியை தாண்டி ராணுவ வீரர்களிடம் வீசிய காட்சிகளும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது, அந்த வகையில், ஒரு குழந்தையை வீரர் ஒருவர் ஒப்படைக்கும் வீடியோவும் வெளியானது..

பாதுகாப்பு படை வீரர்
கடந்த ஆகஸ்ட் 19 ந் தேதி காபூல் ஏர்போர்ட்டில் இருந்து புறப்படவிருந்த அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்தனர்.. அப்போதுதான், ஒரு குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கும் அந்த வீடியோ வெளியானது. ஆனால், தற்போது அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கபடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

தம்பதி
அந்த குழந்தையின் அப்பா பெயர் மிர்சா அலி அகமதி.. 35 வயதாகிறது.. 10 வருஷத்துக்கு முன்பு ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகத்தில் மிர்சா அலி செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.. இவர் மனைவி பெயர் சுரயா.. 32 வயதாகிறது.. இவர்களுக்கு மொத்தம் 5 பிள்ளைகள்.. அதில் காணாமல் போன இந்த 2 வயது குழந்தையும் அடக்கம்.. சம்பவத்தன்று தம்பதி இருவரும், காபூல் விமான நிலையத்தின் வாயில்களுக்கு வெளியே நாட்டை விட்டு வெளியேற போராடிக்கொண்டு இருந்தனர்...

குழப்பம்
எப்படியும் நுழைவாயிலுக்கு சென்றுவிடுவோம் என்று நினைத்தனர்.. அதனால்தான் தங்கள் கையிலிருந்த குழந்தையை அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைத்தனர். பிறகு, மற்ற குழந்தைகளை அழைத்து கொண்டு, கத்தாருக்கும் பின்னர் ஜெர்மனிக்கும் ஒரு வெளியேற்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு இறுதியில் அமெரிக்காவில் தரையிறக்கப்பட்டனர்... இப்போதைக்கு மிர்சா தம்பதி டெக்சாஸில் உள்ள போர்ட் பிளிஸ்ஸில் மற்ற ஆப்கானிய அகதிகளுடன் தங்கி உள்ளனர்...அவர்களுக்கு இங்கு உறவினர்கள் யாரும் இல்லை... மற்ற பிள்ளைகளை பத்திரமாக தங்களுடன் வைத்துள்ளனர்.. ஆனால், பாதுகாப்பு வீரரிடம் தரப்பட்ட குழந்தையைதான் காணோம்.

பாதுகாப்பு வீரர்
இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "அமெரிக்க தளங்கள் மற்றும் வெளிநாட்டு இடங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளோம்.. குழந்தை கடைசியாக காபூல் ஏர்போர்ட்டில் நடந்த நிலையத்தில் குழப்பத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு வீரரிடம் ஒப்படைக்கப்பட்டது.. ஆனால், இப்போது வரை யாராலும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.

தேடுகிறோம்
இதை பற்றி மிர்சா சொல்லும்போது, "நான் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் பேசிவிட்டேன்.. என் குழந்தையை பற்றி விசாரித்தேன்... குழந்தை எங்கே என்று தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்" என்றார் சோகத்துடன்... தற்போது போவோர் வருவோரிடம் எல்லாம் குழந்தை எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் மிர்சா.












Click it and Unblock the Notifications