ஆப்கானிஸ்தான்: தேர்தலில் ஓட்டு ஓட்டு போட்ட முதியவர்களின் விரல்களை வெட்டிய தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஓட்டுபோட்ட முதியவர்களின் விரல்களை தாலிபான்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இதற்கு பதிலடியாக, கடந்த 2001-ம் ஆண்டில் அங்கு அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை விரட்டியடித்தனர்.
இதையடுத்து ஹமீத் கர்சாய் புதிய அதிபரானார். அவரது பதவிககாலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு ஜனநாயக முறைப்படியான அதிபர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.
அப்போது 8 பேர் போட்டியிட்டனர். 70 லட்சம் பேர் வாக்களித்தனர். போட்டியிட்டவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா 45 சதவீதமும், உலக வங்கி முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி 31.6 சதவீதம் வாக்குகள் பெற்றனர். மற்றவர்கள் குறைவாகவே பெற்றனர்.
குறைந்த வாக்கு சதவிகிதம்
ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டபடி தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டு பெற்றவர்களே அதிபராக அறிவிக்கப்படுவார். ஆனால் முதல் கட்ட வாக்கு பதிவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
மறுதேர்தல்
எனவே இரு தினங்களுக்கு முன் மறு அதிபர் தேர்தல் நடந்தது அதில் முதல் 2 இடங்களை பிடித்த அப்துல்லா, அஷிரப் கானி ஆகியோர் போட்டியிட்டனர்.
தீவிரவாதிகள் மிரட்டல்
பொது மக்கள் ஓட்டு போட கூடாது என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆனால் காலை 7 மணியில் இருந்தே வரிசையில் நின்று பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதன் மூலம் 52 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதனால் தலிபான் தீவிரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
முதியவர்கள் கடத்தல்
ஹீராத் மாகாணத்தில் மேற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் ஓட்டு போட்டு 11 முதியவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.
விரலை வெட்டிய தீவிரவாதிகள்
எங்களது எச்சரிக்கையையும் மீறி எப்படி தைரியமாக ஓட்டு போடலாம் என மிரட்டினர். பின்னர் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் அந்த கைவிரல்களை தீவிரவாதிகள் வெட்டி துண்டித்தனர். இதனால் அவர்கள் வலியால் துடித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
அதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் உள்துறை துணை அமைச்சர் ஆயூப் சலாங்கி தெரிவித்துள்ளார். வாக்களித்த முதியவர்களின் விரலை தீவிரவாதிகள் வெட்டிய சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications