"மேட்டர் சிக்கியது".. கதி கலங்கும் புள்ளிகள்.. தாலிபான் வசம் போன "பயோமெட்ரிக்".. அடுத்து என்னாகும்?
அரசாங்கத்தில் சேருங்கள் என்று பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்..!
காபூல்: ஒரு முக்கியமான கருவி தாலிபன்களிடம் சிக்கி உள்ளதாம்.. அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியைதான், இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள்.
20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், தற்போது 20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர்...
அதாவது, இந்த 20 வருடமாகவே பணத்தைக் கொட்டி பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கன் ராணுவமும் போலீஸ் படையும் சின்ன எதிர்ப்புகூட காட்டாமல் சரணடைந்துவிட்டன...!!

போர் விமானம்
அப்படியானால் உலகின் நம்பர் ஒன் வல்லரசான அமெரிக்க ராணுவமானது, உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் என அத்தனையும் பெற்றிருந்து, கடைசியில் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் போனது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.. என்னதான் சமாதானம் செய்துகொண்டு அமெரிக்கா பின்வாங்கினாலும், இது தோல்வியாகவே கருதப்படுகிறது.

தாலிபான்கள்
இப்போது விஷயம் என்னவென்றால், அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளார்களாம்.. இதுதான் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரர்களின் கிலிக்கு காரணமாகி உள்ளது.. கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்தி வந்தது.. பயோமெட்ரிக் என்பது, ஒருவரின் அனைத்து விதமான தரவுகளை கண்டறியப்படுவதுதான்..

விழிரேகை
இந்த கருவியில், ஒருவரின் விழி ரேகை, கை ரேகை, அங்கஅடையாளங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன... நாம் கூட, தமிழகத்தில் இந்த பயோமெட்ரிக் முறையை ரேஷன் முறையில் சில காலம் பயன்படுத்தி இருந்தோம்.. அதேபோல, சில முக்கிய நாடுகளும் இந்த பயோடெக் முறையை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றன.. இதன்மூலம், ஒருவரின் முழு தகவல்களும் அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கும்..

மரபணு தகவல்கள்
இதில் இருந்து ஏதாவது தரவு கசிந்துவிட்டால், அதனை எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்றவும் முடியாது.. அதாவது, தகவல் கசிந்துவிட்டது என்று யாரும் தங்களது மரபணு தகவல்கள் அல்லது கைரேகைகளை பிற்காலத்தில் ஒருபோதும் மாற்றவும் முடியாது.. அப்படிப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியைதான், இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளார்களாம்..

அமெரிக்க ராணுவம்
தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்றோரை கண்டறிவதற்காக இவர்கள் இந்த கருவியை பயன்படுத்தி வந்தனர்.. மேலும் அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் நபர்களின் விவரங்களும் இந்த கருவியில்தான் இடம்பெற்று வந்தன.. இதைதவிர, அமெரிக்க ராணுவத்துடனான கூட்டு முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களின் தகவல்களும் இதில்தான் சேகரிக்கப்பட்டன. இவ்வளவு தகவல்களும் அடங்கிய அந்த கருவி இப்போது தாலிபன்கள் வசம் சிக்கி உள்ளது.
Recommended Video

தாலிபான்கள்
ஆனால், இந்த கருவியை மட்டுமே வைத்து கொண்டு, தாலிபான்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், இதை இயக்க வேண்டும் என்றால், கூடுதல் கருவிகளும் தேவைப்படும் என்றும் இண்டர்செப்ட் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.. அதேசமயம், அந்த கருவிகளை தாலிபன்களுக்கு பாகிஸ்தான் தரக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்கா
இதை பல வருட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது... இப்படித்தான், 2011-ல் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக, அமெரிக்கா நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது... இப்போது தாலிபான்கள் கையில் இந்த கருவி சிக்கியுள்ளதால் அடுத்து என்னாகுமோ? என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது.. குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான்வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications