அய்யோ ஆப்கானிஸ்தான்.. உருக்குலைத்துப் போட்ட நிலநடுக்கம்.. குவியல் குவியலாக சடலங்கள்.. 2,000 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. ஹெராட் என்ற பகுதியில் வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொன்டிருந்தது.

இதேபோல அடுத்தடுத்து 5 முறை அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 முதல் 4.6 வரை பதிவாகி இருந்தது.
இந்நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளிடையே பொதுமக்கள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். வீடுகளை விட்டு வெளியேறி ஓடிவந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானை உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2, 000-த்தை தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் சுமார் 2,500 பேரை காவு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications