ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ராஜினாமா.. பரபரக்கும் காபூல்.. இனி என்னவாகும்?
காபூல் : அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதால் ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் சென்றுவிட்டது. தற்போது காபூல் எல்லைக்குள் நிற்கும் தாலிபன்கள், அதிபர் அஷ்ரப் கனியை ஆட்சியை விட்டு செல்லுமாறு கட்டளையிட்டனர். இதனால் அவர் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
Recommended Video
இதேபோல் ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தற்போதைய நிலையில் எந்த வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எந்த தாக்குதலும் நடத்தாமல் காபூலை கைப்பற்றி மொத்த ஆட்சி நிர்வாகத்தை தாலிபன்கள் நடத்த விரும்பினார்கள் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியது..

அஷ்ரப் கனி ராஜினாமா
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது ராஜினாமாவில் கையெழுத்திட்டுள்ளார் மற்றும் ஒரு இடைக்கால அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்று அந்த நாட்டு வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தன. அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது முழுமையாக தாலிபன்கள் கீழ் இருக்கும் அரசு காபூல் நகரத்தில் அதிகாரத்தை கைப்பற்ற போகிறது.

நாட்டை விட்டு வெளியேறுகிறார்
தலிபான்கள் முறையான கட்டுப்பாட்டை எடுக்கவில்லை என்றாலும், அவர்களின் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில் , துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறுவார் என்று ஆப்கானிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்தன.

வன்முறை இல்லை
தலிபான்கள் தங்கள் அடுத்த நகர்வை இன்னும் முடிவு செய்யவில்லை ஆனால் காபூலில் வன்முறையை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி வெளியேறுவதை அறிவிக்க தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தன.

தாலிபன் வசம் வருகிறது
அஷ்ரப் கனி அதிகாரத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. மேலும் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி உள்ளதால், அந்த அதிகாரம் இப்போதைக்கு தாலிபன்களிடம் இல்லாமல் 'மூன்றாம் தரப்பினரிடம்' ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது . பின்னர் தாலிபன்கள் வசம் வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications