ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்.. 622 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 622 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. குனார் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 6 ஆகவும், அடுத்த நிலநடுக்கம் 4.5 ஆகவும் பதிவானது. கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து இரு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குனார் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகவும், அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 ஆகவும் பதிவானது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 622 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
622 பேர் பலி
நாட்டையே உலுக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 622-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகளில் அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய மற்றும் அண்டை மாகாணங்களில் இருந்து ஆதரவு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 622 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 1,000 பேர் காயமடைந்தனர். பல்வேறு இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது" என்று கூறப்பட்டு இருந்தது.
மீட்பு பணிகள் நடந்து வருகிறது
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த நிலநடுக்கத்தை GMT நேரப்படி 19:17 மணிக்கு பதிவு செய்தது. ஜலாலாபாத்திற்கு கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. குனார் மாகாணத்தின் நூர் கால், சாவ்கி, வாட்பூர், மனோகி மற்றும் சபா தாரா மாவட்டங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளதாகவும், சேத விவரங்கள் இனி தான் வெளி வரும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று சாவ்கி மாவட்டத்தில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக சாவ்கி மாவட்டத்தின் தேவா குல் மற்றும் நூர் குல் மாவட்டத்தின் மாசர் தாரா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டது.
-
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications