ம்ஹூம்.. நோ யூஸ்.. "இந்த 20 வருடங்களாக நீங்கள் படித்தது செல்லாது".. தாலிபான்கள் திடீர் அறிவிப்பு
20 வருடம் படித்து பெற்ற பட்டங்கள் செல்லாது என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்
காபூல்: கடந்த 20 வருடங்களாக, பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நிறைய பேர் படித்து பட்டம் பெற்றுள்ள நிலையில், அந்த பட்டத்தால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லை என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
20 வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தாலிபான்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்..
அந்த வகையில், பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று தாலிபான்கள் முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.. அமைச்சரவையில் பெண்கள் இல்லை

கல்வி நிலையம்
தாலிபான்களின் பேச்சை இதுவரை அந்த நாட்டு பெண்கள் நம்பவுமில்லை... பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரப்படவில்லை. ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. திரைச்சீலை உதவியுடன் தனியாக பிரித்து அமரவைக்கப்படுகிறார்கள்.. பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடமும் திறக்கப்படவில்லை..

பல்கலைக்கழகம்
மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.. பெரும்பாலான பணிகளில் இதைதவிர, பெரும்பாலான துறைகளில் பெண்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று அச்சமும் எழுந்துள்ளது.. ஒருகட்டத்தில் பெண் நீதிபதிகளே கலங்கி போய், உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பித்து செல்லும் நிலைமையும் அங்கு ஏற்பட்டுள்ளது.

சாதாரண பெண்கள்
முக்கிய பெண் நீதிபதிகள் 220 பேர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தன.. இவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்கள் கலக்கத்தில் உறைந்துள்ளனர்.. இப்போது இன்னொரு செய்தி வந்துள்ளது. தலிபான்கள் ஆட்சியில் இல்லாமல் அமெரிக்க நேட்டோ படைகளின் பாதுகாப்பில் நடந்த 2000 முதல் 2020ம் ஆண்டுவரை பள்ளிகளிலும், உயர்கல்விக் கூடங்களிலும் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனராம்..

பல்கலைக்கழகம்
அங்கு தற்போது அமைந்துள்ள இடைக்கால அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் பாகி ஹக்கானி என்பவர் அங்குள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "கடந்த 20 வருடங்களாக தலிபான்கள் ஆட்சியில் இல்லாத நேரத்தில், நேட்டோ, அமெரிக்க பாதுகாப்பின் கீழ் ஆட்சி நடந்தது.. அப்போதைய ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோரது ஆட்சியில் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நிறைய பேர் படித்துள்ளனர்.. அப்படி படித்து பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லை.

மதிப்பு
இந்த நாட்டிற்கு தேசத்துக்கு பயன்படும் வகையில், அதாவது திறமை மற்றும் மதிப்பை உணர்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களையே பணியமர்த்த வேண்டும்... இளைய சமுதாயத்தின் அறிவை ஆப்கனின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்... இன்றுள்ள முதுகலை படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். இந்த பேட்டிதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

பொற்காலம்
காரணம், கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் மக்கள் தலைநிமிர தொடங்கினர்.. பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.. வேலைக்கு செல்ல துவங்கினர்.. ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.. அப்படி இருக்கும்போது, அந்த 20 வருட கல்வி பயன்தரவில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் அமைச்சர்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications