வெடித்தது போர்.. பாகிஸ்தானை கதறவிடும் ஆப்கானிஸ்தான்.. தற்கொலை படை தாக்குதலுக்கு தயாரான தாலிபான்கள்
காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இருந்த மோதல் இன்று போராக வெடித்துள்ளது. கடந்த 22ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசி தாக்கியது. இதற்கு இன்று ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து போர் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவித்தது. தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் இருநாடுகளின் ராணுவமும் பயங்கரமாக மோதி வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த தற்கொலை படை கும்பல் தயாராகி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளனர். இருநாடுகளும் 2,600 கிோலமீட்டர் தொலைவுக்கு எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.தங்கள் நாட்டின் மீது தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தும் நபர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை ஆப்கானிஸ்தான் மறுத்து வருகிறது.

இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இருநாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், பலூச் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து எல்லையில் மோதல் நடந்து வருகிறது.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தான் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் தனதுபோர் விமானங்கள் மூலமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் இறந்தனர். இதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் பாகிஸ்தானுக்கு வார்னிங் செய்திருந்தன.
ஆப்கானிஸ்தான் பதிலடி
அதன்படி நள்ளிரவில் எல்லையில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தாக்குல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருநாடுகளின் வீரர்களும் மாறி மாறி தாக்கி வருகின்றனர்.
இதற்கிடையே தான் போர் தொடங்கி விட்டதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். தற்போது இருநாடுகள் இடையேயான மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருதரப்பிலும் பலி
தற்போதைய மோதலில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தரப்பில் பலிகள் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் தரப்பு, ''133 ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுள்ளனர். 27 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது. 9 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது'' என கூறியுள்ளது.
மறுபுறம் தாலிபான்கள் தரப்பில், ''55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 19 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதலில் நங்கர்ஹாரில் 8 ஆப்கானிஸ்தான் போராளிகள் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்ததுள்ளனர். 13 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சொல்வது என்ன?
இதுதொடர்பாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், '' எல்லை பகுதியில் உள்ள தாலிபான் ராணுவ நிலைகள், தலைமையகங்கள், வெடிமருந்து கிடங்குகள் மீது வான்வெளியாவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரமான ராணுவ பதிலடிக்கு பின் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் தங்கள் நிலைகளில் வெள்ளை கொடிகளை அசைத்து மண்டியிட்டனர்'' என்று செய்திகளை பரப்பி வருகிறது. இதனை ஆப்கானிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. வெள்ளை கொடி காட்டவில்லை. எல்லையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறோம். மோதல் தொடர்ந்து வருகிறது என ஆப்கானிஸ்தான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மறுப்பு
இதுபற்றி தாலிபான்களின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ரத் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''டூரண்ட் எல்லைக்கோட்டின் (பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு) பல்வேறு பகுதிகளில் தீவிர தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
தற்கொலை தாக்குதலுக்கு தயார்
அதுமட்டுமின்றி பாகிஸ்தானை பந்தாட ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இன்னொரு பிளானையும் வைத்துள்ளனர். அதுதான் பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதாகும். இதற்காக தற்கொலை படை தாக்குதலுக்கான படையை தாலிபான்கள் தயார் செய்து வைத்துள்ளது. இதனை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரில் உள்ள அரசால் நடத்தப்படும் பாக்தார் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அந்த செய்தியில் ''தற்கொலைத் தாக்குதல் படைகள் தயாராக உள்ளன. இவர்கள் உடலிலும், வாகனங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து பாகிஸ்தானை தாக்க தயாராக உள்ளனர்.
டூரண்ட் எல்லைக்கோட்டில் அமைந்துள்ள பக்தி, பக்திக்கா மற்றும் கோஸ்ட் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் தீவிர தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக வருவதாக தாலிபான்களின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ரத் கூறியுள்ளார்'' என செய்தி வெளியிட்டுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications