சீனாவை நம்பி ஏமாந்தது போதும்.. இந்தியா அடித்த அடியில் துருக்கியிடம் கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: இந்தியா அடித்த அடியில் நிலைக்குலைந்து போன பாகிஸ்தான் இனி சீனாவை நம்ப தயாராக இல்லை. சீனாவை நம்பி ஏமாந்தது போதும் என்று துருக்கி நாட்டிடம் கையேந்த தொடங்கி உள்ளது பாகிஸ்தான். அதாவது சீனாவின் எச்க்யூ 9 ரேடார் அமைப்பு நம் நாட்டின் ஏவுகணை உள்ளிட்டவற்றை கண்டறிவதில் தோல்வியடைந்தது. இதனால் துருக்கியின் ஏஎல்பி 300 ஜி ரோடர் அமைப்பை கேட்டு பாகிஸ்தான் கையேந்த தொடங்கி உள்ளது. இந்த ஏஎல்பி 300 ஜி என்பது என்ன? அதனை பெற பாகிஸ்தான் துடிப்பது ஏன்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். அதன்பிறகு நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் வலுத்தது. பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் நம்மை தாக்க முயன்றது. இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் நம் நாட்டின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நம்மிடம் மண்டியிட்டது. மோதல் முடிவுக்கு வந்தது.
நம் நாடு கொடுத்த அடியால் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விமானப்படை தளம், ராணுவ தளம் மட்டுமின்றி சீனாவின் தயாரிப்பான எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு அமைப்பும் செயலிழக்க செய்யப்பட்டது. பாகிஸ்தானை பொறுத்தவரை அந்த நாட்டின் 80 சதவீத ராணுவ தளவாடங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சீனாவின் எச்க்யூ9 வான்வெளி பாதுகாப்புக்கான ரேடார் அமைப்பை தான் பாகிஸ்தான் அதிகம் நம்பி இருந்தது. நம் நாட்டின் ஏவுகணை, போர் விமானம், ட்ரோன் உள்ளிட்டவற்றை வானிலேயே அடையாளம் கண்டு சிக்னல் வழங்கும். அதன்மூலம் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்களை அழிக்கலாம் என்று பாகிஸ்தான் நம்பியது.
ஆனால் நம் நாட்டின் துல்லிய தாக்குதலை சீனாவின் எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு ரேடார் அமைப்பால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு ரேடார் சிஸ்டமையே நம் நாட்டின் ஏவுகணைகள் தாக்கி அழித்தது. இதனால் தான் பாகிஸ்தான் தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது. சீனாவை நம்பினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு பாகிஸ்தான் வந்துள்ளது. அதன்படி சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பான எச்க்யூ 9 ரேடார் சிஸ்டமுக்கு மாற்றாக துருக்கியின் ஏஎல்பி 300 ஜி ரேடார் சிஸ்டமை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனமான அசில்சன் (Aselsan) நிறுவனத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. துருக்கியின் ஏஎல்பி 300ஜி ரேடார் அமைப்பு என்பது டிஜிட்டல் பீம்ஃபார்மிங் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியது. இந்த ரேடார் அமைப்பின் மூலம் பாிஸ்டிக் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் உள்ளிட்டவை நீண்டதூரத்தில் இருந்து வரும்போதே கண்டறிந்து கண்காணிக்கும் திறன்கொண்டது. இதன்மூலம் எதிரி நாடுகளின் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்களை இந்த ஏஎல்பி 300 ஜி ரேடார் அமைப்பு மூலமாக முன்கூட்டியே கண்டறிந்து அழிக்க முடியும்.
மேலும் இந்த ஏஎல்பி 300 ஜி ரேடார் அமைப்பை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எளிதாக நகர்த்த முடியும். 30 நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தி தாக்குதலுக்கு வரும் ஏவுகணை, போர் விமானங்களை கண்டறிய முடியும். இது நேட்டோ ஏர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டமுடன் செயல்படும் தன்மை கொண்டது. இதனால் அனைத்து வகையிலான வானிலை சூழலிலும் இயங்கும் த்னமை கொண்டது.
இந்த அமைப்பு எளிதில் பயன்படுத்தக்கூடியது, நிலையான 10-டன் வாகனங்கள் வழியாக அமைக்கவும் கொண்டு செல்லவும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இது நேட்டோ ஏர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் (ACCS) உடன் செயல்பட கூடியது. அதேபோல் அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும் தன்மை கொண்டது. இதனால் இந்த ஏஎல்பி 300ஜி ரேடார் அமைப்பை வாங்க பாகிஸ்தான் துருக்கி நிறுவனத்துடன் பேசி வருகிறது.












Click it and Unblock the Notifications