Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா வழியில் ஐரோப்பிய நாடுகள்.. இந்த அடியை டிரம்ப் எதிர்பார்க்கல! தனித்துவிடப்படும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: உலக நாடுகளுடன் பரஸ்பர வரி விஷயத்தில் அமெரிக்கா பஞ்சாயத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில், சுங்க வரி அதிகரிப்பு காரணமாக அமெரிக்காவுக்கான அஞ்சல் பார்சல் சேவையை இந்தியா நிறுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையை நிறுத்தியிருக்கின்றன.

ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டண விலக்கு முடிவுக்கு வருவதால், அமெரிக்காவுக்கான ஐரோப்பிய அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரியிலிருந்து முன்பு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை முடிவுக்கு வந்திருப்பதால் அஞ்சல் சேவைகள் நிறுத்தப்படுவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருக்கின்றன.

Postal services US

முன்னதாக அமெரிக்க அரசு 'டி மினிஸ்' என்கிற திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இதன் மூலம் $800-க்கும் குறைவான மதிப்புள்ள பொருட்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்போது அதற்கு சுங்க வரி விதிக்கப்படாது. ஆனால் இப்போது இந்த திட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய திட்டம் எதையும் அமெரிக்கா இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, புதிய திட்டம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அஞ்சல் சேவை தொடரும் என ஐரோப்பிய நாடுகள் கூறியிருக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் $64.6 பில்லியன் மதிப்புள்ள 1.36 பில்லியன் அஞ்சல் பார்சல்கள் உலகம் முழுவதும் இருந்து அமெரிக்காவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை தெரிவித்திருக்கிறது.

தற்போது டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உடனடியாக ஏற்றுமதியை நிறுத்தியுள்ளன. ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் இன்று முதல் இந்த முடிவை செயல்படுத்த உள்ளன. இங்கிலாந்தின் ராயல் மெயில் இன்று முதல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்தது.

நார்டிக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான போஸ்ட்நார்ட் மற்றும் இத்தாலியின் அஞ்சல் சேவை ஆகஸ்ட் 30 முதல் இதே போன்ற இடைநிறுத்தங்களை அறிவித்துள்ளன. 51 ஐரோப்பிய பொது அஞ்சல் இயக்குநர்களின் சங்கமான போஸ்ட்யூரோப், ஆகஸ்ட் 29க்குள் தீர்வு காணப்படாவிட்டால், அதன் அனைத்து உறுப்பினர்களும் இதே முடிவை எடுப்பார்கள் என்று கூறியது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய ஷிப்பிங் சேவை நிறுவனமான டி.எச்.எல், "சுங்க வரிகள் எதிர்காலத்தில் எவ்வாறு வசூலிக்கப்படும், யார் வசூலிப்பார்கள், என்ன கூடுதல் தரவுகள் தேவைப்படும், அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு தரவு பரிமாற்றம் எப்படி நடக்கும் என்பதில் முக்கிய கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளன. எனவே, அமெரிக்காவிற்கு அஞ்சல் பார்சல்களை இனி கொண்டு செல்லவோ முடியாது" என்று கூறியிருக்கிறது.

டிரம்ப் அதிபரானதிலிருந்து அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதன் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தனது உறவை மாற்றியமைத்ததன் காரணமாக இந்த நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக பரஸ்பர வரி விஷயத்தில் ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் என தோஸ்து படா தோஸ்து நாடுகளுக்கு அமெரிக்கா வரி போட்டு தள்ளியது. இதனால், இந்த நாடுகள் அதே பாணியில் அமெரிக்காவுடன் உறவை மாற்றியமைத்திருக்கின்றன.

அஞ்சல் விஷயத்தில் இந்த நாடுகள் கறாரான நடவடிக்கை எடுக்கவும் டிரம்பின் அணுகுமுறைதான் காரணம். மறுபுறம் எந்த நாடும் அமெரிக்காவை பெரியதாக கண்டுக்கொள்வதை போல தெரியவில்லை. உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியா கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. ஆனால் வரி விஷயத்தில் நம் முதுகில் அமெரிக்கா குத்திவிட்டது. எனவே, நாம் அமெரிக்காவை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க கூடாது, சீனாவிடம் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க கூடாது என சொல்லியும் நாம் இதையெல்லாம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படியே போனால் அமெரிக்காவை பூமர் அங்கிள் என உலக நாடுகள் விமர்சிக்க தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+