‛ஆபரேஷன் இரும்பு வாள்’.. பாலஸ்தீனத்தை பழி தீர்க்கும் இஸ்ரேலின் போர் வியூகம் இதுதான்! பரபர தகவல்
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பாலஸ்தீனத்தின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் ‛ஆபரேஷன் இரும்பு வாள்' என்ற பெயரில் வியூகம் வகுத்து பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது தற்போது பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ள நிலையில் பாலஸ்தீனத்துக்கு எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு உள்ளது.
இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடங்கினர். 5,000 ஏவுகணைகள் மூலம் பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தொடங்கி உள்ளது. ஸ்டேட் ஆப் வார் என அறிவித்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துகிறது. மேலும் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' (Operation Iron Swords) என பெயர் வைத்துள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.
இதுபற்றி இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛தற்போதைய தாக்குதல் என்பது பாராகிளைடர்கள் மூலமாகவும், கடல் வழியாகவும், தரை வழியாகவும் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதலாகும். இப்போது நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்க போராடுகிறோம். காசா பகுதியைச் சுற்றியுள்ள சில இடங்களில் நாங்கள் சண்டையிட்டு வருகிறோம் " என்றார்.
இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய மெசேஜ் அனுப்பி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛நம் நாடு இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறும். நாம் போரில் இருக்கிறோம். இதில் வெற்றி பெறுவோம். இந்த மோதலுக்காக நம் எதிரிகள் அவர்கள் நினைக்காத வகையிலான விளைவுகளை எதிர்கொள்வார்கள்'' என தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications