For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்த அதிரடி மூவ்.. ரஷ்யாவை தொடர்ந்து அந்த 2 நாடுகளை வளைக்கும் இந்தியா? குழம்பும் அமெரிக்கா!

Google Oneindia Tamil News

டெல்லி: உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவில் இந்தியா உள்ளது. ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

Recommended Video

    Russia-வுக்கு China உதவினால்.. | Joe Biden, Xi Jinping discuss Ukraine Issue | Oneindia Tamil

    ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற முடிவிற்கும் கூட அமெரிக்கா வந்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    ஐரோப்பா உயர்த்தவில்லை

    ஐரோப்பா உயர்த்தவில்லை

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இன்னும் ஐரோப்பா வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதன் அளவை ஐரோப்பா உயர்த்தவில்லை. ஐரோப்பாவிற்கு ரஷ்யாவிற்கு மோதல் இருப்பதால் முடிந்த அளவு ரஷ்யாவை நம்பி இருக்கலாம் விலகி இருக்க ஐரோப்பா முயன்று வருகிறது. ஆனால் இந்தியாவோ அமெரிக்கா, ஐரோப்பா பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.

    எங்கிருந்து அதிகம் வாங்குகிறது

    எங்கிருந்து அதிகம் வாங்குகிறது

    இந்தியா தனது மொத்த ஆயில் தேவையில் 85 சதவிகிதத்தை வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதில் அதிகமாக ஈராக், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தது 23 சதவிகிதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதேபோல் சவுதியில் இருந்து 18 சதவிகிதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது . அரபு அமீரகத்தில் இருந்து 11 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து 2-3 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது.

    அதிகரித்துள்ளது

    அதிகரித்துள்ளது

    இந்த நிலையில்தான் உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவில் இந்தியா உள்ளது. ரஷ்யா இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முடிவு செய்துள்ள நிலையில் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து கூட்டம் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மாதத்தில் முதல் 15 நாட்கள் 360,000 பேரல்கள் எண்ணெய்யை இந்தியா ரஷ்யாவிடம் தினமும் வாங்கியது. இது தற்போது 203,000 பேரல்/ தினசரி என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது.

    குறைந்த விலை

    குறைந்த விலை

    முன்னதாக அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா கைவிட்டது. அதன்பின் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் வர்த்தகத்தை கைவிட்டது. இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு குறைந்த விலையில் எண்ணெய் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்காவின் தடையை மதித்து இந்தியா எண்ணெய் வாங்கும் முடிவை கைவிட்டது. ஆனால் இந்த முறை ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடையை இந்தியா மதிக்கவில்லை.

    இனியும் பேச்சை கேட்க முடியாது

    இனியும் பேச்சை கேட்க முடியாது

    அமெரிக்காவின் தடைகளை இனியும் மதிக்க கூடாது என்ற வகையான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. தடைகளுக்கு அஞ்சாமல் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவில் இறங்கி உள்ளது. இதையடுத்து அமெரிக்காவும், இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. இந்தியா விதிகளை மீறுவதாக நான் நினைக்கவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளது.

    வாங்கும் வாய்ப்பு உள்ளது

    வாங்கும் வாய்ப்பு உள்ளது

    தற்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி இருக்கும் இந்தியா வரும் நாட்களில் ஈரான், வெனிசுலாவிடம் இருந்தும் எண்ணெய் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இரண்டு நாடுகளும் இப்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளிடம் இருந்தும் எண்ணெய் வாங்க அமெரிக்கா முயன்று வருகிறது.

    பெட்ரோல் டீசல்

    பெட்ரோல் டீசல்

    அமெரிக்காவே தனது தடையை மதிக்காமல் இந்த இரண்டு நாடுகளிடம் எண்ணெய் வாங்கும் நிலையில், இந்தியாவும் இந்த இரண்டு நாடுகளிடம் இருந்து பழையபடி குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு இது ஒருவகையில் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மட்டும் நடக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு ரஷ்யாவிடம் இருந்தும் குறைந்த ஓலையில் எண்ணெய் வரும், ஈரான், வெனிசுலாவிடம் இருந்தும் எண்ணெய் வரும். இதனால் இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாடு வெகுவாக குறையும்.

    English summary
    After Russia, India may consider buying oil from Iran and Venezuela soon as US won't sanction .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X