கடலில் விழுந்த ஏர்ஏசியா விமான பயணிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.62 லட்சம் இழப்பீடு
ஜகர்தா: இந்தோனேசியா கடலில் விழுந்து மூழ்கிய விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை தேடி மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதுவரை விமானத்தின் 5 பாகங்கள் மற்றும் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விரைவில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்படும் என்று தேடல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமான நிறுவனம் பலியானவர்களில் சிலரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான டிடியை அளித்துள்ளது. அதை அவர்கள் ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications