For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை குண்டு போட்டு சீர்குலைக்க அல் கொய்தா திட்டம்

Google Oneindia Tamil News

விம்பிள்டன், லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போது குண்டுவெடிப்பை நிகழ்த்தி போட்டியை சீர்குலைத்து, இங்கிலாந்தில் பதட்டத்த ஏற்படுத்த அல் கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தைச் சேர்ந்த போராளிகளை வைத்து இந்த குண்டுவெடிப்புகளை நடத்த அல் கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளனராம்.

al qaeda terrorist

இதுதொடர்பாக இங்கிலாந்து அரசும், விம்பிள்டன் போட்டி ஏற்பாட்டாளர்களை எச்சரித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் மோதலில் ஈடுபட்ட வரும் தீவிரவாதிகள், அந்தப் போரை இங்கிலாந்துக்கும் கொண்டு செல்லுமாறு அல் கொய்தாவைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விம்பிள்டனில் வருடாந்திர டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இதில் இங்கிலாந்து அரச குடும்பத்து உறுப்பினர்கள், பல்துறைப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் போட்டிகளை ரசிக்க வருகை தரவுள்ளனர்.

English summary
The Wimbledon tennis championships in Britain are being reportedly targeted by Al Qaeda bombers. In a report published in Daily Express, British jihadis have been urged to bomb the Wimbledon tennis championships as the UK was warned it faces a new wave of terror attacks. Muslim extremists fighting in Syria and Iraq have been told by the Al Qaeda to bring the battle to Britain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X