Alexei Navalny: விஷ தவளையால் கொன்ற புதின்.. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி இறந்தது எப்படி? 5 நாடுகள் பகீர்
மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) கடந்த 2024ம் ஆண்டில் சிறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் தவளையிடம் இருந்து கிடைக்கும் விஷத்தை பயன்படுத்தி அலெக்ஸி நவல்னி கொல்லப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளன.
நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். இவருக்கு எதிராக அலெக்ஸி நவல்னி என்பவர் பிரசாரம் செய்து வந்தார்.
விளாடிமிர் புதின் ஊழல் செய்வதாக கூறி வந்தார். மேலும் புதினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.

சிறையில் இறப்பு
2020ம் ஆண்டில் அலெக்ஸி நவல்னியை விஷம் வைத்து கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்தார். ஜெர்மனியில் 5 மாதம் சிகிச்சை பெற்று அவர் குணமடைந்தார்.
மேலும் இந்த கொலை முயற்சியின் பின்னணியில் அதிபர் புதின் தான் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு சிகிச்சை முடித்து ரஷ்யா சென்ற நிலையில் அலெக்ஸி நவல்னி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 பிப்ரவரி மாதம் ஆர்க்டிக் சிறையில் அவர் இறந்தார்.
இறப்பில் சந்தேகம்
நடைபயிற்சி மேற்கொண்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அலெக்ஸி நவல்னியின் மரணம் இயற்கையானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர். மேலும் பிற எதிர்க்கட்சிகளும், பிற நாடுகளும் அலெக்ஸி நவல்னியின் மரணம் இயற்கையானது என்பதை ஏற்க மறுத்தனர்.
5 ஐரோப்பிய நாடுகள்
குறிப்பாகஅலெக்ஸி நவல்னியின் மனைவி யுலியா நவல்னாயா கூறும்போது, ‛‛எனது கணவரை அதிபர் புதின் தான் விஷம் வைத்து கொன்றுள்ளார்'' என்று குற்றம்சாட்டினார். ஆனால் அது வெறும் குற்றச்சாட்டாகவே இருந்தது.
இந்நிலையில் தான் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகளும் அலெக்ஸி நவல்னியை கொல்ல விஷ தவளையை ரஷ்யா பயன்படுத்தி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது.
விஷ தவளை
இதுதொடர்பாக 5 ஐரோப்பிய நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நவல்னியின் போராட்டத்திற்கு ரஷ்ய அரசு பயந்தது. இதனால் கொடிய விஷம் கொண்ட தவளையை பயன்படுத்தி அவரை கொன்றுள்ளது எங்களுக்கு தெரியும். அந்த குறிப்பிட்ட தவளையிடம் இருந்து கிடைக்கும் நஞ்சைபயன்படுத்துவதற்கான வாய்ப்பு ரஷ்யாவிடம் உள்ளது.
அலெக்ஸி நவல்னியின் உடலில் "எபிபாடிடின்"(Epibatidine) என்ற விஷம் கண்டறியப்பட்டுள்ளது. இது தவளையிடம் இருந்து கிடைக்கும் விஷமாகும். இந்த ‛எபிபாடிடின்' தென்அமெரிக்காவில் உள்ள விஷ தவளையிடம் இருந்து கிடைக்கும். இந்த தவளைகள் ரஷ்யாவில் கிடையாது.'' என கூறப்பட்டுள்ளது.
மனைவி சொன்னது சரி
இதுபற்றி பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் இவெட் கூப்பர் கூறுகையில், "ரஷ்யா, நவல்னியை ஒரு அச்சுறுத்தலாக பார்த்தது. இந்த விஷத்தை பயன்படுத்துவதன் மூலம், ரஷ்ய அரசு தான் பயன்படுத்தும் இழிவான வழிமுறைகளையும், அரசியல் எதிர்ப்பின் மீதான மிகப்பெரிய அச்சத்தையும் வெளிக்காட்டியுள்ளது" என்றார்.
இதுபற்றி முனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு நடுவே நடந்த நிகழ்ச்சியில் அலெக்ஸ் நவால்னியின் மனைவி நவல்னாயா, ‛‛எனது கணவரை அலெக்ஸ் நவல்னியை, விளாடிமிர் புதின் தான் கொலை செய்ததாக கூறினேன். அது கொலை என்பதற்கான உறுதியான ஆதாரம் உள்ளது. ஆனால் என்னை யாரும் நம்பவில்லை. நான் கூறியது வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்தன. ஆனால் என்னுடைய வார்த்தைகள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications