Alien Technology: பூமியை நெருங்கும் ஏலியன்? இதென்ன புதுசா இருக்கே! விஞ்ஞானிகள் கொடுத்த ஷாக்
வாஷிங்டன்: பூமிக்கும், சூரிய குடும்பத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பொருள், தற்போது நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண விண்கல் போல இது தெரிந்தாலும், ஏலியன்களின் விண்வெளி ஓடமாக கூட இது இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சில சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள்.
நாசாவின் ATLAS திட்டத்தின் கீழ் கடந்த ஜூலையில் சிலியில் உள்ள தொலைநோக்கி மூலம் வானத்தை விஞ்ஞானிகள் துலவிக்கொண்டிருந்தார்கள். அப்போது மர்மமான ஒரு பொருளை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இது விநாடிக்கு ஏறத்தாழ 60 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

சூரிய குடும்பத்தில் சில பொருட்கள்தான் இவ்வளவு வேகத்தில் நகரும். விண்கற்கள் இந்த வேகத்தில் நகரும் என்றாலும் அதன் பாதை ஒரு ஒழுங்கில் இரு்ககும். இது அப்படி இல்லை. எனவே இது நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கின்றனர். எனவே இதற்கு 3I/ATLAS என பெயரிட்டிருக்கின்றனர்.
அதிவேக இயக்கத்தாலும் மர்மமான தோற்றத்தாலும் விஞ்ஞானிகளின் கவனத்தை 3I/ATLAS ஈர்த்துள்ளது. இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வரும் மூன்றாவது வான்பொருளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வான்பொருள் சுமார் 12 மைல் அகலமுடையது மற்றும் சூரியனைச் நோக்கி வினாடிக்கு 37 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இது எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 அன்று, பூமிக்கு 130 மில்லியன் மைல் தூரத்தில் அருகில் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட ஆய்வுகள் இதை ஒரு சிறுகோள் எனக் கருதினாலும், பின்பு இதன் வால் நட்சத்திரத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.
விஞ்ஞானிகளின் கருத்துக்கள்
பெரும்பாலான விஞ்ஞானிகள் 3I/ATLAS ஒரு சாதாரண பனிக்கட்டி வால் நட்சத்திரம் என நம்புகின்றனர். ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியற்பியல் விஞ்ஞானி ஏவி லோப் முன்வைத்த கோட்பாடு மற்ற ஆய்வாளர்களையும் திறந்த மனதுடன் சிந்திக்கத் தூண்டுகிறது. "இது அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் கல்விப் பயிற்சி" என லோப் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அசாதாரண கோட்பாடுகள் மற்றும் ஆய்வுகள்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஏவி லோப் தலைமையிலான குழு, 3I/ATLAS இயற்கையானதல்லாமல் வேற்றுக்கிரக தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டாக இருக்கலாம் என்ற கோட்பாட்டை முன்வைத்துள்ளது. இந்த ஆய்வு ஜூலை 16 அன்று arXiv ப்ரீபிரிண்ட் சர்வரில் பதிவேற்றப்பட்டது. இதில், வான்பொருளின் வேகம் மற்றும் பயணப் பாதையை லோப் மற்றும் அவரது குழு ஆராய்ந்துள்ளனர்.
இது வரை சக மதிப்பாய்வு செய்யப்படாத இந்தக் கட்டுரை, வேற்றுக்கிரக வாழ்க்கை தொடர்பான புதிய கேள்விகளை எழுப்புகிறது. 'கேலிலியோ புராட்க்ட்' என்ற அறிவியல் முயற்சியின் தலைவராக இருக்கும் லோப், தனது துணிச்சலான கருத்துக்களால் அறியப்பட்டவர். அவர் வேற்றுக்கிரக தொழில்நுட்பங்களை ஆராய்வதில் முக்கிய பங்காற்றுகிறார்.
இந்த வான்பொருளின் மர்மங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோட்பாடுகள், விண்மீன்களுக்கிடையேயான ஆராய்ச்சிகளை மேலும் தீவிரமாக்குகின்றன. 3I/ATLAS பற்றிய மேலதிக ஆய்வுகள் மனித குலத்தின் விண்வெளி புரிதலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications