அமெரிக்காவில் பள்ளிகளுக்கு முதன்முறையாக பக்ரித் விடுமுறை... இஸ்லாமியர்கள் வரவேற்பு
நியூயார்க் : அமெரிக்காவிலேயே முதன்முறையாக நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு முஸ்லிம்களின் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் மாகாணத்தில் உள்ள 1,800 பள்ளிகள் நாளை (வியாழக்கிழமை) மூடப்பட்டிருக்கும். சுமார் 11 லட்சம் மாணவர்கள் பயின்று வரும் இந்தப் பள்ளிகளுக்கு யூதர்களின் புனித தினத்தை முன்னிட்டு இன்று (புதன்) விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001-ம் ஆண்டு நியூயார்க் மாகாணத்தின் மன்ஹாட்டன் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை தீவிரவாதிகள் விமானம் மூலம் தகர்த்தனர். இதையடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணம் வளர்ந்து வருவதாக அமெரிக்கவாழ் முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு சிறியதாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜமைக்கா முஸ்லிம் மையத்தின் இயக்குநர் இமாம் ஷம்சி அலி கூறும்போது, "இமாம் என்ற முறையிலும் பெற்றோர் என்ற வகையிலும் பக்ரித் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் இத்தகைய கொள்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான ஒரு உணர்வை அளிக்க வகை செய்யும்"என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications