For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அல்லா" எங்கே? ஃபிபா உலகக் கோப்பையில் வேலையை காட்டிய அமெரிக்கா.. பாய்ந்து வரும் ஈரான்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

டோஹா: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஈரான் தற்போது புதிய எதிர்ப்பு ஒன்றை பதிவு செய்துள்ளது.

2022 ஃபிபா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. கத்தாரில் இந்த வருடம் நடக்கும் கால்பந்து தொடர்தான் மிகவும் காஸ்டலியான தொடர்.

உலகில் இதுவரை நடந்ததிலேயே மிக பிரம்மாண்டமாக இந்த தொடரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தொடருக்காக 220 பில்லியன் டாலரை கத்தார் செலவு செய்துள்ளது.

பல்வேறு விஷ்யங்களுக்காக இந்த தொடர் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

குஜராத்தில் மட்டும்.. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.163 கோடி நன்கொடை.. அலறிய கட்சிகள் குஜராத்தில் மட்டும்.. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.163 கோடி நன்கொடை.. அலறிய கட்சிகள்

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள், நாடுகள், பார்வையாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி பொது இடங்களில் மது அருந்த கூடாது. அதாவது பார்களில் கூட அதற்கான கார்ட், அதற்கான வீசா வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே மது அருந்த அனுமதி.

பொது இடங்களில் கணவன், மனைவிகள் நெருக்கமாக இருக்க கூடாது.

வெளியூர் தம்பதிகள் கை கோர்க்கலாம், ஆனால் மற்றபடி நெருக்கமாக எதுவும் செய்ய கூடாது.

அதேபோல் சுற்றுலா வந்தபெண்கள் ஹிஜாப் போடாமல் வரலாம். ஆனால் சிறிய உடைகளை உடுத்த கூடாது.

தன்பாலின உறவினர்களுக்கு நாட்டிற்குள் அனுமதி உள்ளது.

மைதானத்திற்குள் யாரும் முத்தமிட கூடாது. மைதானத்திற்குள் யாரும் பியர் குடிக்க கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த கட்டுப்பாடுகளுக்கு பல்வேறு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளன. ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஈரான் தற்போது புதிய எதிர்ப்பு ஒன்றை பதிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்க கால்பந்து அணியின் அசோசியேஷன் சார்பாக பாயிண்ட் டேபிள் ஒன்று வெளியிடப்பட்டது. ஈரான் இருக்கும் அதே குழுவில்தான் அமெரிக்கா இருக்கிறது. இதில் ஈரான் நாட்டு கொடியை அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது. அதில் ஈரான் கொடியில் இருக்கும் அல்லா என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

கொடி

கொடி

ஈரான் கொடியில் மேலே பச்சை, கீழே சிவப்பு, நடுவில் வெள்ளை வண்ணம் இருக்கும். இதில் நடுவில் அல்லா என்ற வார்த்தை இருக்கும். இதில் அல்லா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அமெரிக்கா போஸ்ட் செய்து இருந்தது. இதைத்தான் ஈரான் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளது. எங்கள் கொடியில் உள்ள அல்லா என்ற வார்த்தை எங்கே. அமெரிக்கா எங்களை தேவையின்றி சீண்டுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஃபிபா அமைப்பு அமெரிக்காவை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் பின் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஈரானில் நடக்கும் ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அல்லா என்ற வார்த்தையை நீக்கியதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி 'கலச்சார காவலர்கள்' தாக்கியதில் 22 வயது இளம்பெண் உயிரிழந்த நிலையில் அந்நாடு முழுவதும் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஈரானில் கடந்த சில நாட்களுக்கு முன் 22 வயது மாசா அமினி என்ற மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடந்த செப்டம்பர் 13ம் தேதி இவர் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்ற போது அங்கு "கலாச்சார போலீசார்" மூலம் கைது செய்யப்பட்டார். அவர் சரியாக ஹிஜாப்பை அணியாமல், முடி வெளியே தெரியும்படி ஹிஜாப் அணிந்து இருந்ததால் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இதன்பின் போலீஸ் டார்ச்சரில் அவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா இப்படி செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது. ஈரானின் எதிர்ப்பை தொடர்ந்து 24 மணி நேரம் கழித்து ஈரான் கொடி மாற்றப்பட்டு உண்மையான கொடி அல்லா என்று பெயருடன் வைக்கப்பட்டது.

English summary
Allah controversy in FIFA foot ball world cup 2024: Why does Ira oppose the USA over a flag issue? What happened?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X