காசாவில் போரிட முடியாது.. இஸ்ரேல் வீரர்களால் பிரதமர் நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல்! பெரிய ட்விஸ்ட்
டெல்அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இன்னும் இஸ்ரேல் வெற்றி பெறாத நிலையில் அந்த நாட்டு ராணுவ வீரர்கள் காசாவில் போர் புரிய மறுப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ள நிலையில் இஸ்ரேல் வீரர்கள் போர் புரிய மறுப்பது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி உள்ளன. இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம் காலமாக நடந்து வரும் மோதல் தான் காரணமாகும்.

இதற்கிடையே தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் மொத்தம் 1,200 இஸ்ரேலியர்கள் பலியாகினர்.
இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தார். பாலஸ்தீனத்தின் காசா மீது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். அதோடு 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பல நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதனை கேட்காமல் போரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தமட்டில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்த போரை சாதகமாக வைத்து ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்து கட்டிவிட வேண்டும் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் காசாவில் போர் புரிய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மறுத்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் என்பது இப்போதைக்கு முடியாது என்பதால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்து போரிட மறுப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, ‛‛காசா மீதான தொடர் போரால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்வதால் அவர்கள் நீண்டகால போரை விரும்பவில்லை'' என செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதவிர ஓராண்டை கடந்த போரால் இஸ்ரேலிய வீரர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர். அதோடு மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். இதனால் பல வீரர்கள் மனநலம் மற்றும் உளவியல் ஆலோசனைகளை கேட்பதாகவும், சிலர் மனஉளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் இஸ்ரேலில் 80 ஆயிரம் வீரர்கள் ரிசர்வ் முறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தற்போது போரை விரும்பவில்லை. சிலர் தொடர்ந்து 5 மாதம் போரில் ஈடுபட்டு நாடு திரும்பிய பிறகு மீண்டும் போரிட செல்ல மறுக்கின்றனர். இதனால் ஒரு படைக்கு 12 வீரர்கள் இருந்த நிலையில் தற்போது 5 முதல் 7 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இது போரில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் போரை தொடர வேண்டும் என்றால் கூடுதலாக படை வீரர்கள் வேண்டும். ஆனால் தற்போது இஸ்ரேல் நாட்டு படை வீரர்கள் போரிட தயக்கம் காட்டி வருகின்றனர். அதுதவிர புதிதாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை என்பது இஸ்ரேலில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் ராணுவ சட்டப்படி அந்த நாட்டை சேர்ந்த யூத மதத்தை சேர்ந்த ஆண்கள் 3 ஆண்டுகளும், யூத பெண்கள் 2 ஆண்டுகளும் ராணுவ சேவையாற்ற வேண்டும். அதேபோல் Bedouin, Druze பிரிவை சேர்ந்த மக்களும் கட்டாயம் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையிலும் 15 சதவீதம் வரை சரிவு என்பது ஏற்பட்டுள்ளது.
இதனால் போருக்கு தேவையான வீரர்கள் இன்றி இஸ்ரேல் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசா மீதான போர் மற்றும் லெபனானின் இருந்து குடைச்சல் தந்த ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராகவும் போரை தொடங்கினர். இதனால் இஸ்ரேல் படை வீரர்கள் இருநாடுகளிலும் குவிக்கப்பட்டனர்.
ஆனால் இன்று அமெரிக்கா, பிரான்ஸ் மத்தியஸ்தம் செய்த நிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் லெபனானில் இருந்து இஸ்ரேல் படை வீரர்கள் இஸ்ரேல் திரும்ப உள்ளனர். இது ஒரு வகையில் ஆறுதலாக இருக்கும் நிலையில் அங்கிருந்து திரும்பும் வீரர்களை மீண்டும் காசாவுக்கு நெதன்யாகு அனுப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications