ரிமோட் கன்ட்ரோலுடன் இயங்கும் ஸ்மார்ட் பூட்டுகள்.... அமேசானில் அறிமுகம்
ரிமோட் கன்ட்ரோலுடன் இயங்கும் ஸ்மார்ட் பூட்டுகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: ரிமோட் கன்ட்ரோல் மற்றும் வீடியோவுடன் இயங்கும் ஸ்மார்ட் பூட்டுகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கொரியர் டெலிவரி பாய்கள் கொடுக்கப்பட்டுள்ள ரகசிய எண்ணை கொண்டு உள்ளே சென்று பொருள்களை வைத்து விடலாம்.
தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நாம் இருந்த இடத்தில் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நாம் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து முக்கியமான கொரியரோ, பொருள்களோ வந்துவிட்டால் சற்று சிக்கல்தான்.

அக்கம்பக்கத்துக்கு வீடுகளில் கொடுத்துவிட சொல்கிறோம். ஆனால் அவர்களும் வீட்டில் இல்லாவிட்டால் எப்படி. ஒரு வீட்டில் 4 பேர் அல்லது 5 பேர் இருந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் பயணித்துவிட்டு வீடுகளுக்கு வருகிறோம். இல்லாவிட்டால் நாம் கிளம்பிய நேரம் பார்த்து நெருங்கிய விருந்தாளி திடீர் சர்பிரைஸாக வந்துவிட்டால் என்ன செய்வது.
பாழாய் போன கேஸ் சிலிண்டர் கூட காசை வைத்துக் கொண்டு காத்திருக்கும் நேரத்தில் வராது. நாம் இல்லாத நேரத்தில்தான் வரும். இந்த கஷ்டங்களை போக்க அமேசான் நிறுவனம் ஸ்மார்ட் லாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு பெயர் அமேசான் கீ ஆகும். சிறிய போன் போல் உள்ள இந்த பூட்டில் ஒரே சமயத்தில் 30 பேருக்கு உண்டான ரகசிய குறியீடுகளை சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தமது வீட்டுக்கு அடிக்கடி வரும் கொரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அவரவருக்கென தனித்தனி எண்களை கொடுத்துவிட வேண்டும்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறியீடுகளை கொண்டு வீட்டை திறந்து கொரியர் பொருள்களை வைத்து விட்டு செல்வர். கார்பென்டிங் வேலை, சில ஆல்ட்ரேஷன் வேலை என ஆள்களை வரவைக்கும்போது அவர்களுக்கான ரகசிய குறியீட்டை கொடுக்கலாம்.
அதேபோல் நண்பர்கள், உறவினர்கள் என வந்திருப்பர். இதுபோல் உங்கள் வீட்டுக்கு யார் வந்தார்கள், சென்றார்கள் என்பது குறித்த விவரங்கள் உங்கள் செல்போனுக்கு வந்துவிடும். பூட்டின் லாக் செய்யும் பகுதி கேஸ் ஸ்டவ்வில் உள்ள திருகு பட்டன் போல் உள்ளது.
இதன் விலை ரூ.12,300 மட்டுமே. இணையதள வசதி, வெப் கேமரா, ஸ்மார்ட் போன் வசதி இருந்தால் போதும். இந்த பூட்டை வாங்கிக் கொள்ளலாம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பூட்டை ரகசிய குறியீட்டுடன் கைரேகையும் வைத்தால் மட்டுமே பூட்டு திறக்கவும் மூடவும் முடியும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications