சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பரப்பில் அமெரிக்கா போர்க் கப்பல்... பதிலடி தரப்போவதாக சீனா சீற்றம்!!
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பரப்பில் அமெரிக்கா தமது போர்க் கப்பலை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் பதிலடி கொடுக்கப்பதாக அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய கடல்வழி வர்த்தகத்தில் தென்சீன கடல் பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் இயற்கை எரிவாயு நிறைந்த கடற்பரப்பும் கூட.

இதனால் இந்த தென்சீன கடற்பரப்பு முழுவதையுமே தமக்கு சொந்தம் கொண்டாடுகிறது சீனா. ஆனால் வியட்னாம், மலேசியா, புரூனே, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளும் தென் சீன கடற்பரப்பில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக அறிவித்துள்ளன.
இதனிடையே தென்சீன கடற்பரப்பை கைப்பற்றும் வகையில் ஒரு செயற்கையான தீவை சீனா உருவாக்கி உள்ளது. இதில் ராணுவ விமானங்களை நிறுத்தும் விமான ஓடுதளத்தையும் சீனா அமைத்திருக்கிறது.
இந்த செயற்கையான தீவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில்தான் சர்ச்சைக்குரிய செயற்கைத் தீவுக்கு அருகே 12 நாட்டிகல் மைல் தொலைவில் அமெரிக்கா தனது போர்க்கப்பலை திடீரென அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லாசன் என்ற போர்க் கப்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது.
இது சீனாவை கொதிப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் கப்பல் கண்காணிக்கப்படுகிறது. சீனாவின் அனுமதியை பெறாமல் ஸ்ப்ராட்லி தீவு பகுதியில் அமெரிக்கா சட்டவிரோதமாக தனது கப்பலை நிறுத்தியுள்ளது.
இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நாட்டுக்கும் சீனா உறுதியுடன் பதிலடி கொடுக்கும். தென் சீனக்கடல் பகுதியையும், வான்வெளியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த தமது கண்டனத்தைத் தெரிவிக்க அமெரிக்கா தூதருக்கும் சீனா சம்மன் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் கூடுதல் போர்க் கப்பல்களை அமெரிக்கா தென்சீன கடற்பரப்புக்கு அனுப்பி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அரங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications