டம்மியான டிரம்ப்.. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்தும் இந்தியா? மோடியிடம் பேசிய உலக தலைவர்கள்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை அதிபராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் நிறுத்திவிடுவேன் என்று கூறி டிரம்ப்பால் அதனை செய்து காட்ட முடியவில்லை.. தான் நினைத்ததை விட ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது கடினமானதாக உள்ளதாக கூறி டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவது மோடியின் கையில் தான் உள்ளது என்று ஐரோப்பிய தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மோடியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் டிரம்பின் மவுசு குறைந்து விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி பற்றிய விவரம் வருமாறு:

2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இன்னும் போர் முடியவில்லை. 3 ஆண்டுகளை கடந்து போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால் அவர்களால் போரை நிறுத்த முடியவில்லை.

amid-donald-trump-effort-pm-modi-emerged-as-an-alternative-for-the-west-to-stop-ukraine-russia-wa

குறிப்பாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில், ‛‛நான் அதிபராக இருந்திருந்தால் போர் வராமல் தடுத்து இருப்பேன். இருப்பினும் அதிபரானதும் அடுத்த 24 மணிநேரத்தில் போரை நிறுத்துவேன்'' என்று கூறினார். ஆனால் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அதிபரானார்.

தோற்றுப்போன டிரம்ப்

அவர் அதிபராகி 7 மாதங்கள் கடந்த நிலையில் அவரால் போரை நிறுத்த முடியவில்லை. இருப்பினும் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பலமுறை அழைத்து பேசி உள்ளார். அதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் பேசிய டிரம்ப் அலாஸ்காவில் நேரில் சந்தித்தும் போர் நிறுத்தம் பற்றி கூறினார். ஆனால் டிரம்பின் முயற்சி பலனளிக்கவில்லை. போர் தொடர்ந்து வருகிறது.

இதனால் டிரம்ப் விரக்தியடைந்துள்ளார். வெள்ளை மாளிகையில் ரோஸ் கார்டனில் டிரம்ப் தனது கட்சியை சேர்ந்த எம்பிக்களுக்கு டின்னர் விருந்து வழங்கினார். அவர்களிடம் பேசியபோது, ‛‛உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவம் என்பது எதிர்பார்த்ததை விட கடினமாக உள்ளது. இருப்பினும் போரை எப்படியாவது நிறுத்துவோம்'' என்றார்.

மோடி பக்கம் திரும்பிய தலைவர்கள்

டிரம்பின் இந்த பேச்சை தொடர்ந்து தான் தற்போது உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளை எடுத்து கொண்டால் உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.

ரஷ்யா போரை சமாளிக்க உக்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பக்கப்பலமாக இருந்து வருகின்றன.

இமானுவேல் மேக்ரான் மோடியிடம் பேச்சு

இந்நிலையில் தான் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி விவாதித்துள்ளார். இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர்.

இதுதொடர்பக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ அதிபர் மேக்ரானுடனான உரையாடல் சிறப்பாக இருந்தது. பிரான்ஸ், இந்தியா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, முன்னற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி விவாதிக்கப்பட்டது. உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்தும் பேசினோம். உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா, பிரான்ஸ் கூட்டணி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்'' என கூறியிருந்தார்.

மேக்ரான் சொன்னது என்ன?

அதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கடந்த வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் பிரான்சில் முக்கிய ஆலோசனை நடத்தினோம். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி பிரதமர் மோடியிடம் விவரித்தேன்.

இதில் பிரிட்டன் உள்பட 31 நாடுகள் பங்கேற்றன. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுடன் கைகோர்க்க முடிவு செய்யப்பட்டது. உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை கொண்டு வருவதில் இந்தியாவும், பிரான்சும் உறுதியாக இருக்கின்றன. அமைதியை கொண்டு வர தொடர்ந்து செயல்படுவோம்'' என்று கூறிள்ளார்.

புதின் - மோடி நட்பு

இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியுடன் போர் நிறுத்தம் பற்றி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்த மையப்புள்ளியாக டிரம்ப் இருந்து வருகிறார். ஆனால் அவரே போரை நிறுத்த முடியவில்லை என்று புலம்பி உள்ளார். இதனால் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் உடனான நட்பை பயன்படுத்தி பிரதமர் மோடியால் போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் நம்புகின்றனர்.

மேலும் சமீபத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிரதமர் மோடியுடன் காரில் தனியாக புதின் ஆலோசனை நடத்தினார்.

இப்படி இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர். இதனால் மோடியை பயன்படுத்தி போரை நிறுத்த ஐரோப்பிய தலைவர்கள் முன்வந்துள்ளனர். இதனால் தான் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு ஐரோப்பிய தலைவர்கள் பேசி வருகின்றனர்.

எந்தெந்த தலைவர்கள் பேசினர்?

கடந்த 2 மாதத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - மோடி ஆகியோர் 2 முறை பேசி உள்ளனர். அதேபோல் 2வது முறையாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசி உள்ளார். அதுமட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மோடியிடம் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+