சீனாவில் பரபரப்பு.. சிறுவனை தாக்கிய பறவை காய்ச்சல்! முதல் முறையாக மனிதனுக்கு பரவியது.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா பாதிப்பு இன்னும் முடியாத நிலையில் அங்குள்ள ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக 4 வயது சிறுவனை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது. எச்3என்8 திரிபு கொண்ட இந்த பறவை காய்ச்சல் குதிரை, நாய், பறவைகளை தாக்கிய நிலையில் முதல் முறையாக மனிதனை பாதித்துள்ளது.

சீனாவில் வூஹான் மகாணத்தில் 2019 இறுதியில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து இந்தியா உள்பட பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது.

இந்தியாவில் 2021 துவக்கத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது வரை 3 அலைகளாக கொரோனா பாதித்து மக்களை சிரமப்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனாவால் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

சிறுவனுக்கு பரவிய பறவை காய்ச்சல்

சிறுவனுக்கு பரவிய பறவை காய்ச்சல்

இந்நிலையில் தான் சீனாவில் பரவும் பறவை காய்ச்சல் மனிதனை தாக்கி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு: சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 4வது சிறுவன் ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தான். இதையடுத்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவனுக்கு குணமாகவில்லை.

எச்3என்8 திரிபு வைரஸ்

எச்3என்8 திரிபு வைரஸ்

இதையடுத்து அவனுக்கு தொடர்ச்சியாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அதிர்ச்சியான முடிவு கிடைத்தது. அதாவது சிறுவன் H3N8 திரிபு கொண்ட பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவியதந்து. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மற்றவர்களுக்கு பாதிப்பில்லை

மற்றவர்களுக்கு பாதிப்பில்லை

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் பரவி இருக்கலாம். இதுபற்றி ஆராய்ந்து வருகிறோம். சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆபத்தானதா? இல்லையா?

ஆபத்தானதா? இல்லையா?

'எச்3 என்8' வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. தற்போது தான் முதல் முறையாக மனிதனை தாக்கியுள்ளது. முதற்கட்ட ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு கொண்டு வைரஸ் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது'' என தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+