பெருந்துயரம்.. சுற்றி வளைத்த இஸ்ரேல்.. இருந்த வாய்ப்பும் போச்சு! மொத்தமாக இருளில் மூழ்கிய காசா
இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் காசா நகர் மொத்தமாக இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் பரிதவித்து வரும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாதி என அறிவித்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை திடீரென்று ஹமாஸ் அமைப்பு 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கி உள்ளதாக கூறி இஸ்ரேல் காசா பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று 5வது நாளாக இருதரப்புக்கும் இடையே யுத்தம் நடந்தது. தற்போது வரை 2000 பேர் வரை பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் இஸ்ரேலை விடமாட்டோம் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அதேபோல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு பாடம் புகட்டுவோம் என இஸ்ரேல் தொடர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகிறது.
காசா என்பது 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும். இங்கு 2.3 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம். 2.3 மில்லியன் என்பது 23 லட்சம்) மக்கள் வசிக்கின்றனர். இதற்கிடையே தான் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியை முழுவதுமாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் காசா நகரின் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். காசா பகுதியை பொறுத்தமட்டில் ஒரேயொரு மின்உற்பத்தி நிலையம் மட்டுமே உள்ளது. இங்கிருந்து தான் பிற இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய யுத்தத்துக்கு நடுவே எரிபொருள் இன்றி அந்த மின்உற்பத்தி மையம் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனால் காசா முழுவதுமாக இருளில் மூழ்க தொடங்கி உள்ளது.
மின்சாரம் இல்லாத நிலையில் மக்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கும் கூட எரிபொருளாக டீசல் என்பது தேவை. போருக்கு நடுவே இதனை பெறுவது சிரமமான ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் மக்கள் செல்போன், தொலைக்காட்சி எதையும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு அவர்கள் நாட்டு நடப்பை பற்றி அறிந்து கொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மின்சாரம் இல்லாததால் தண்ணீர் தேவைக்காக மோட்டாரை இயக்க முடியாத சூழல் இருக்கிறது. இதனால் தண்ணீர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் சிரமத்தை சந்திக்க தொடங்கி உள்ளனர். இதுபற்றி காசாவில் வசித்து வரும் கமல் மஸராவி கூறுகையில், ‛‛தற்போதைய சூழல் மிகவும் வித்தியாசமாக உள்ளது.
தண்ணீர் இல்லை. இன்டர்நெட் வசதி இல்லை. மின்சார வசதி இல்லை. அருகே உள்ள வணிக வளாகங்களுக்கு செல்ல முயற்சித்தேன். ஆனால் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால் அங்கும் நான் செல்லவில்லை. இந்த மோதல் முற்றிலுமாக நின்றால் தான் நாங்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்'' என்றார். இதற்கிடையே தான் இஸ்ரேல் அறிவிப்பு இன்றி தாக்குதல் நடத்தினால் தங்களின் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்கள் கொலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications