நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்.. ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்
வாஷிங்டன்: டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 36 மணி நேரத்திற்கு பிறகு பயணிகள் மாற்று விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்கு AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. இந்த விமானம் ரஷ்ய வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறங்கியதால் அமெரிக்கா இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வந்தது. மகாடன் விமான நிலையம் ரஷ்யாவின் ஊரகப்பகுதியில் அமைந்து இருந்த சிறிய நகரம் ஆகும். எனவே இங்கு பயணிகளுக்கு போதிய வசதிகள் எதுவும் இல்லை. உணவு, தங்கும் இடம் என அடிப்படை வசதிகள் கூட சவுகரியமாக இன்றி ஏர் இந்தியா விமான பயணிகள் தவித்தனர்.

இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், "விமானத்தில் 230 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். குழந்தைகள் முதியவர்கள் பலர் இருந்தனர். எங்கள் லக்கேஜ்கள் இன்னும் விமானத்தில் தான் உள்ளது. வெவ்வேறு இடங்களுக்கு எங்களை பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். சில பயணிகள் அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தரையில் மெத்தைகளை விரித்து படுக்க வேண்டிய நிலை இருந்தது.
கழிவறை வசதிகள் கூட உரிய முறையில் இல்லை. உணவு இங்கு மிகவும் மாறுபட்டதாக உள்ளது. கடல் உணவுகளும் அசைவ உணவுகளுமே அதிகம் உள்ளன. சில பயணிகள் வெறும் சூப் மற்றும் பிரெட் ஆகியவற்றையே எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. வயதான பயணிகளுக்கு மருந்து மாத்திரைகள் முடிந்து போகும் நிலை உள்ளது' என்றார்.
கடுமையான சிரமத்தை அனுபவிப்பதாக பயணிகள் ஒருபக்கம் கூறி வந்த நிலையில், 36 மணி நேரம் கழித்து மாற்று விமானம் மூலமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 50 க்கும் குறைவான அமெரிக்க பயணிகள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதந்த் படேல் கூறுகையில், " டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வந்த விமானத்தில் 50 க்கும் குறைவான பயணிகள் உள்ளதாக நாங்கள் அறிந்து கொண்டோம். ரஷ்யாவில் தவிக்கும் பயணிகளை அழைத்து வருவதற்காக மாற்று விமானம் புறப்பட்டுள்ளதை அறிகிறோம். ஏர் இந்தியா பயணிகளுக்கும் விமானத்திற்கு அதன் வழித்தடத்திலும் போதுமான உதவிகள் செய்வோம்" என்றார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications