பக்கத்து வீட்டுக்காரரை கொன்று ஓவன் அடுப்பில் சமைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்து மைக்ரேவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சமைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனைக்கு ஆளான ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (42வயது) என்ற அந்த பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜேம்ஸ் ஷியபருடன் (36வயது) தகராறு செய்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.
இந்த தகராறு காரணமாக ஐஸ் கட்டிகளை எடுக்கப்பயன்படும் கருவியால் அவரது கண்ணுக்குள் குத்திய பின் அவரது கழுத்தை இறுக்கி அவரைப் படுகொலை செய்துள்ளார் ஏஞ்ஜெலா. அதன் பின் ஜேம்ஸின் உடலை துண்டுகளாக வெட்டிய ஏஞ்ஜெலா அவற்றை பாத்திரங்களில் போட்டு ஒவன் அடுப்பில் சமைக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், ஒவன் அடுப்பு சரியாக செயற்பட மறுத்ததால் அவர் தனது இளவயது மகன்களின் உதவியுடன் அவற்றை பைகளில் போட்டு தனது வீட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் வீசிவிட்டார்.
இந்த கொலையை கண்டுபிடித்த போலீசார், ஏஞ்சலாவை கைது செய்து கொல்லப்பட்ட ஜேம்ஸின் உடலை தேடினர். இதில் ஜேம்ஸின் உடலில் இருந்த 206 எலும்புகளில் 56 எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரது தலை இன்னமும் மீட்கப்படவில்லை.
கைது சம்பவத்திற்குப் பின்னர் ஏஞ்ஜெலா தற்கொலைக்கு முயற்சி செய்து போலீசார் காப்பாற்றப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏஞ்சலாவிற்கு புளோரிடா மாநிலத்திலுள்ள வொலுசியா நகர நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications