கத்தார் மேல் கை வைத்த இஸ்ரேல்.. ஒன்று கூடிய அரபு நாடுகள்! முக்கிய திட்டத்தை செயல்படுத்த முடிவு
தோஹா: சமீபத்தில் கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன்மூலம் இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான 9வது இஸ்லாமிய நாடாக கத்தார் மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஆலோசித்திருக்கின்றன. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அவசர உச்சி மாநாடு இன்று தோஹாவில் தொடங்கியது. இதில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விரிவான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஈரானின் வலியுறுத்தல்
இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, இஸ்ரேலின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார். கத்தாரின் இறையாண்மையை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குப் பிராந்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதையும் அவர் வரவேற்றிருக்கிறார்.
கத்தாரின் நிலைப்பாடு
"இந்த காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்த சகோதர அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்தின் நட்பு நாடுகளுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன" என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேபோல பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார், "இந்த மாநாடு ஒரு தெளிவான செயல் திட்டத்தை எட்ட வேண்டும். அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் தனது கடமையை செய்யும்" என்று கூறியிருக்கிறார்.
இந்த மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து இன்று அல்லது நாளை அறிக்கை வெளியாகலாம்.
இஸ்ரேல் தாக்கிய 8வது நாடு கத்தார்
பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை, லெபனான், சிரியா, ஈரான், இராக், துனிஷா, ஏமன், கத்தார் என 8 நாடுகள் மீது இஸ்ரேல் இதுவரை தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஹமாஸை அழிக்கிறோம் என்று சொல்லிதான் பாலஸ்தீனம் மீது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஆனால் இந்த நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. மாறாக, 63,000க்கும் அதிகமான பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்திருக்கிறது. ஐநாவும் அமெரிக்காவும் கூட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டன. ஆனால் இஸ்ரேல் அடங்கவில்லை.
கத்தார் மீது தாக்குதல்
மறுபுறம் கத்தார் மீது நடந்த தாக்குதல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்க ஹாமஸ் தலைவர்களை கத்தார் அழைத்திருந்தது. அழைப்பின் பேரில் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் செப்.19ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் இஸ்ரேல் 10 போர் விமானங்களை கொண்டு பேச்சுவார்த்தை நடந்த கட்டிடம் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் ஹமாஸ் தலைவர் உயிர் பிழைத்துவிட்டார். இருப்பினும், அவருடன் வந்தவர்களும், கத்தார் பாதுகாப்பு படையை சேர்ந்தவரும் கொல்லப்பட்டனர்.
காலை வாரிய அமெரிக்கா
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கத்தாரில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்திருக்கிறது. கத்தார் மீது மூன்றாம் நாடுகள் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தடுக்க வேண்டும் என்கிற உடன்படிக்கையின் கீழ்தான் அமெரிக்காவுக்கு கத்தார் இடம் கொடுத்தது. ஆனால் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலை தடுக்கவில்லை.
"அமெரிக்காவுக்கு நண்பனாக இருந்தால் ஆபத்து நிச்சயம், எதிரியாக இருந்தால் மரணம் உறுதி" என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது கத்தார் விஷயத்தில் நிரூபணமாகியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அவசர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications