"எஸ்கலேட்டர்.." ரொம்பவே ஆபத்து போலவே.. சிக்கிய இளம்பெண்.! துண்டாக கால்கள்! ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: இளம் பெண் ஒருவர் ஏர்போர்ட்டில் நகரும் நடைபாதை எனப்படும் Moving Walkwayஇல் செல்லும் போது அவரது கால்கள் அதில் சிக்கி துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம் எங்குப் பார்த்தாலும் எஸ்கலேட்டர்களை எனப்படும் நகரும் படிக்கட்டுகளைப் பார்க்க முடியும். குறிப்பாக மால்களில் இதுபோன்ற எஸ்கலேட்டர்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படும்.

இருப்பினும், குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது இதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மோசமான விபத்துகளும் ஏற்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

 Are escalators dangerous as Woman Loses her Leg in Airports Moving Walkway

தாய்லாந்து: தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் முக்கிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து.. சர்வதேச அளவில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்தில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இதற்கிடையே அங்கே உள்ள ஏர்போர்டில் உள்ள நகரும் நடைபாதையில் சிக்கி இளம்பெண் கால்களை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே துரதிர்ஷ்டவசமான விபத்தில், பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சிக்கி தாய்லாந்து பெண் தனது இடது காலின் ஒரு பகுதியை இழந்தார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை நடந்துள்ளது. அங்கு இரண்டாவது உள்நாட்டு முனையத்தின் கேட் 4 மற்றும் கேட் 5 இடையே உள்ள தெற்கு காரிடாரில் உள்ள நகரும் நடைபாதையில் இந்த விபத்து நடந்துள்ளது.

பறிபோன கால்கள்: இந்த விபத்தால் காலை இழந்த பெண்ணின் அடையாளத்தை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. அந்த பெண் நகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமானத்தில் செல்ல இருந்தார். அவர் சூட்கேஸ் மீது தடுமாறி விழுந்ததாகவும், அப்போது அவரது கால் நகரும் நடைபாதையில் சிக்கி இழுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கால் நடைபாதையில் சிக்கிய நிலையில், அந்த பெண் கதறித் துடித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற விமான நிலைய மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த பெண் சாய் மாய் மாவட்டத்தில் உள்ள பூமிபோல் அதுல்யதேஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதிகாரிகள் விளக்கம்: இந்த விபத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டான் முயாங் சர்வதேச விமான நிலைய இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட், "நடைபாதை பெல்ட்டின் கீழ் சூட்கேஸ் சக்கரங்களும் கிடந்தன. அதை நாங்கள் எடுத்துள்ளோம். அந்த நடைபாதை தினசரி ஆய்வு செய்யப்படு வருகிறது. விபத்து குறித்துக் கூடுதல் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த பயணிக்குத் தேவையான மருத்துவச் செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஏர்போர்ட் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்" என்றார்.

 Are escalators dangerous as Woman Loses her Leg in Airports Moving Walkway

இந்த விபத்துக்குப் பிறகு, விமான நிலையத்தில் உள்ள அந்த நகரும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. அதில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பொறியியல் வல்லுநர்கள் நாடு முழுக்க ஏர்போர்டுகளில் இருக்கும் நகரும் நடைபாதை மற்றும் எஸ்கலேட்டர்களை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+