விண்ணை பிளக்கும் கோஷம்.. அர்ஜென்டினா அதிபருக்கு எதிராக வீதிகளில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்!

Subscribe to Oneindia Tamil

புவெனஸ் ஐரிஸ்: அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜென்டினா மக்கள் ஆயிரக்கணக்கனோர் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் அர்ஜெண்டினா மக்கள், அந்நாட்டு அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.'

 Argentina rocked by anti-government protests

அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் ஐரிஸ் நகரில் மத்திய சதுக்கத்தில் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

கைகளில் தேசிய கொடியுடன் சாலைகளில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், "சுதந்திரம், நீதி மற்றும் அரசியலமைப்பு" என்று விண்ணை பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டனர். அதேநேரம் பொதுமக்களும் இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த இடத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள், போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து தங்கள் ஆதரவைக் காட்டினர்.

முன்னாள் அதிபரும் தற்போதைய துணை அதிபருமான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரை ஊழல் வழக்குக்கு உட்படுத்தாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக போடப்படும் ஊரடங்குக்கு எதிராகவும், நீதி நிவாரணம் கேட்டும் அர்ஜென்டினாவில் மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

தலைநகர் புவெனஸ் ஐரிஸ்க்கு மட்டுமல்லாமல், கோர்டோபா, ரொசாரியோ, மார் டெல் பிளாட்டா, மெண்டோசா மற்றும் சான் கார்லோஸ் டி பாரிலோச்சே ஆகிய நகரங்களிலும் பெர்னாண்டஸின் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+