Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களை துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்ட ஆசிரியர்.. அமெரிக்காவில் தொடரும் அசம்பாவிதம்

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் ஆகும் இது.

இதில் பல மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பித்து இருக்கிறார்கள். யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

அந்த மாணவர்கள் இந்த நிகழ்வை விவரிப்பது கலங்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் புளோரிடாவில் துப்பாக்கி சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

புளோரிடா சம்பவம்

புளோரிடா சம்பவம்

அமெரிக்காவில் பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி இருக்கிறது. முக்கியமாக ராணுவத்தில் இருந்து, பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் எளிதாக துப்பாக்கி வாங்கிவிடுகிறார்கள்.

இவர்கள் பொதுமக்கள் இருக்கும் இடமாக பார்த்து தாக்குதல் நடத்துகின்றனர். இதை தடுக்கவே டிரம்ப் இந்த யோசனையை கூறியுள்ளார்.

புளோரிடா துப்பாக்கி சூடு

புளோரிடா துப்பாக்கி சூடு

புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். 2012க்குப் பின் நடந்த மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.போலீஸ் அந்த 19 வயது கொலைகாரனை ஏற்கனவே கைது செய்துவிட்டது. இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது.

கொடுக்க வேண்டும்

கொடுக்க வேண்டும்

இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் டிரம்ப்பிடம் துப்பாக்கி சூடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ''பள்ளிகளில் இனி துப்பாக்கி சூடு நடத்தாமல் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலருக்கு கொடுக்கலாம்'' என்றார்.

முதல்

முதல்

ஆனால் அவர் இப்படி சொல்லி ஒரே வாரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களை நோக்கி சுட்டு இருக்கிறார். ஜார்ஜியாவில் உள்ள வித்தியா ஸ்பிரிங் உயர்நிலை பள்ளியில், கணித ஆசிரியர் ஒருவர் இப்படி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். ஆனால் அவர் ஒரு முறை சுட்டவுடன் பிடிக்கப்பட்டார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அடுத்தது

அடுத்தது

அதே போல் நேற்று இன்னொரு சம்பவமும் நடந்து இருக்கிறது. அட்லாண்டாவில் உள்ள டால்டன் என்ற பள்ளியில் சமூகவியல் ஆசிரியர் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். மாணவர்கள் கொட்டும் மழையில் ஓடி இருக்கிறார்கள். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

தவறு

தவறு

இதனால் அதிபரின் துப்பாக்கி கொடுக்கும் ஐடியாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான திட்டம் என்றுள்ளனர். மாணவர்களை பாதுகாக்க வேறு திட்டம் வகுக்க வேண்டும் என்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+