2020 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வெல்லத் துடிக்கும் ஆர்யா
துபாய்: 2020ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் நோக்கத்துடன் துபாயில் படிக்கும் தமிழக மாணவி பயிற்சி பெற்று வருகிறார்.
துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா (11). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
சில பயிற்சிகள் கடினமாக இருந்தாலும் தனது பெற்றோர் லட்சுமிநாராயணன் - ஸ்ரீவித்யா, பயிற்சியாளர் பென்னி ஜோசப் மற்றும் பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் தனக்கு பெரும் உற்சாகமும், ஆதரவும் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.
நீச்சல் பயிற்சிகளுக்கான உடை உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தனது பெற்றோரே செலவு செய்து வருகின்றனர் என்றார்.
ஆர்யா 2020 ஒலிம்பிக் போட்டியில் வெல்ல உலகத் தமிழர்களின் ஆதரவும், பிரார்த்தனையும் இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று நிச்சயம் தங்கம் வென்று பெருமை சேர்ப்பார்.
மேலும் நீச்சல் பயிற்சிகளுக்கு ஏதேனும் பெரிய நிறுவனங்கள் உதவிட முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடர்புக்கு: [email protected]
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications