Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷூ போடவே நேரமில்லை.. இதில் ஆப்கனிலிருந்து கார் முழுக்க பணத்துடன் வெளியேறினேனா? அஷ்ரப் கானி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

காபூல்: ரத்தகளறி ஏற்படுவதை தவிர்க்கவே தான் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாகவும் தான் வெளியேறும்போது கார் முழுக்க பணம் கொண்டு வந்ததாக கூறப்படுவது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தப்பிச்சு போன Ashraf Ghani எங்கு இருக்கிறார் ? வெளியான தகவல்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து அதிபர் அஷ்ரப் கானியை அவர்கள் வெளியேற சொன்னதை அடுத்து அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

    அங்குள்ள மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளார்கள். அங்கு வரும் விமானங்களில் ஓடி சென்று கூட்டம் கூட்டமாக ஏறி கொள்கிறார்கள். ஆனால் தலிபான்களோ நாங்களை யாரையும் துன்புறுத்த மாட்டோம்.

    அழைப்பு

    அழைப்பு

    நாட்டிலிருந்து தப்பியவர்கள் மீண்டும் வந்துவிடுங்கள் என அழைப்பு விடுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்வதை யெல்லாம் பார்த்து மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த மாதத்திற்குள்ளாக அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிடும் என அந்நாட்டு அரசு சொல்கிறது.

    மற்ற நாட்டினர்

    மற்ற நாட்டினர்

    அது போல் ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற நாட்டினர் தங்கள் குடிமக்களையும் தூதரக அதிகாரிகளையும் அழைத்து செல்ல மீட்பு விமானங்களை அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் படைகளே தலிபான்கள் உள்ளே நுழையும் போது எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அமெரிக்க படைகள் ஏன் அவர்களுடன் சண்டையிட்டு உயிரை இழக்க வேண்டும் என அதிபர் ஜோ பிடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    படைகள் வாபஸில் எந்த மாற்றமும் இல்லை

    படைகள் வாபஸில் எந்த மாற்றமும் இல்லை

    மேலும் படைகள் வாபஸ் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே அஷ்ரப் கானி எந்த நாட்டிற்கு தப்பினார் என்ற விவரம் வெளியாகவில்லை. அவர் தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் தங்கள் நாட்டில் நுழையவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    ரத்தக்களறியை தவிர்க்க விரும்பினேன்

    ரத்தக்களறியை தவிர்க்க விரும்பினேன்

    இந்த நிலையில் தான் ரத்தக்களறியை தடுக்கவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக அவர் வெளியேறிய சில மணி நேரத்தில் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார். ஆனால் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிய போது ஹெலிகாப்டரில் கார்களுடன் அதில் நிறைய பணத்துடன் தப்பியதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது. மேலும் நாட்டு மக்கள் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த போது இவர் மட்டும் தப்பி வெளியேறியது இழிவான செயல் என்றும் ரஷ்யா விமர்சனம் செய்திருந்தது.

    கொள்ளையடித்துச் சென்ற ஆப்கான் அதிபர்

    கொள்ளையடித்துச் சென்ற ஆப்கான் அதிபர்

    அவர் ஆப்கானிஸ்தான் வளங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ஆப்கான் தூதரகமும் புகார் தெரிவித்திருந்தது. இதையடுத்து மவுனத்தை கலைத்த அஷ்ரப் கானி நேற்றைய தினம் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் ரத்தக்களறியை தவிர்க்கவே தான் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

    பேரிடர்களை தவிர்க்கவே தப்பினேன்

    பேரிடர்களை தவிர்க்கவே தப்பினேன்

    இதுகுறித்து அவர் கூறுகையில், தலிபான்களால் ஏற்படும் பேரிடர்களை தவிர்க்கவே நான் அங்கிருந்து தப்பி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிபெயர்ந்துள்ளேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும்.நான் அங்கேயே இருந்திருந்தால் நிச்சயம் தூக்கிலிடப்பட்டிருப்பேன். மேலும் யேமன், சிரியா போல் ஆப்கானிஸ்தானிலும் ரத்த ஆறு ஓடியிருக்கும். முன்னாள் அதிபர் நஜிபுல்லாவுக்கு நேர்ந்த கதி எனக்கும் நடந்திருக்கும்.
    தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபரே பொறுப்பில்லாமல் நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு எங்கள் நாட்டு படைகள் ஏன் உயிர் துறக்க வேண்டும் என அமெரிக்காவும் நாட்டோ அமைப்பும் கேள்வி எழுப்பியுள்ளது. அங்கு நடந்தது என்ன என தெரியாமல் இருப்போர் என்னை எடை போட வேண்டாம்.

    தலிபான்களுடன் பேச்சுவார்த்தை

    தலிபான்களுடன் பேச்சுவார்த்தை

    தலிபான்களுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இது எங்கள் தோல்வி. எந்த வன்முறையும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை தலிபான்களுக்கு ஒப்படைக்க விரும்பினேன். ஆனால் எனது விருப்பத்திற்கு மாறாகவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன். 4 கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க நான் தப்பியோடியதாக ஆப்கானுக்கான ரஷ்ய தூதர் குற்றம்சாட்டியிருந்தார்.

    பணத்துடன் தப்பியதாக கூறுவது தவறு

    பணத்துடன் தப்பியதாக கூறுவது தவறு

    அது தவறான. பணத்துடன் நான் தப்பினேன் என கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. அவர்கள் பொய் கூறுகிறார்கள். நான் பணத்துடன் வெளியேறினேனா என ஐக்கிய அரபு அமீரகத்தின் கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். எனது காலனிகளை அணிய கூட எனக்கு நேரம் இல்லாத நிலையில் நான் எப்படி அத்தனை பணத்தை கொண்டு வருவேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனது பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தி உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினர். அதன் பேரில்தான் நான் வெளியேறினேன் என்றார் அஷ்ரப் கானி.

    உயிரை காக்க...

    உயிரை காக்க...

    எனது சொந்த நலனுக்காகவும் என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நான் வெளியேறிவிட்டதாக சொல்வதை நம்பாதீர்கள். எனக்கு துபாயில் தங்கும் எண்ணம் இல்லை. மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தலிபான்களை உள்ளடக்கிய அரசை உருவாக்குவது குறித்து நான் ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றார் அஷ்ரப் கானி. இதனிடையே ஆப்கன் மக்களின் வரிப்பணத்துடன் தப்பியோடிய அஷ்ரப் கானியை கைது செய்யுமாறு இன்டர்போலிடம் தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+