பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு மார்ஷல் பதவி.. கடைசியாக இந்த பொறுப்பு வகித்தவர் என்ன செய்தார் தெரியுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை பாகிஸ்தானின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான மார்ஷலாக பதவி உயர்வு அளித்துள்ளது. முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு இந்த கவுரவத்தை ஆசிப் முனீருக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது. ஜெனரல் ஆயுப் கான் ராணுவ சட்டத்தின் நிர்வாகியாக கடந்த 1958 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் கடந்த வாரம் உச்சத்தில் இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கலங்கி போன பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது. பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் இந்தியா நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்தன.

மார்ஷலாக பதவி உயர்வு
இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் தடுமாறிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றதாக சுயதம்பட்டத்தை அடித்து வரும் பாகிஸ்தான், உலக அரங்கிலும் அப்படியான ஒரு தோற்றத்தை காட்ட முயற்சித்து வருகிறது. இத்தகைய சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை பாகிஸ்தானின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான மார்ஷலாக பதவி உயர்வு அளித்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு இந்த கவுரவத்தை ஆசிப் முனீருக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது. மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய உயரிய கவுரவம் தற்போது உள்ள ராணுவ தளபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவுக்கு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வன்மத்தை கக்கி வந்த முனிருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் புதிய பொறுப்பை கொடுத்துள்ளார். பாகிஸ்தானை பொறுத்தவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விட, ராணுவம் அதிக அதிகார பலத்தை சில நேரங்களில் காட்டுவது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு ஃபீல்டு மார்ஷல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, ஆயுப் கான் காலத்தில் ஏற்பட்ட சர்வாதிகார ஆட்சியை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
கடைசியாக 1956 ஆம் ஆண்டு
பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டதையடுத்து 1956 ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு உருவக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதனால், 1956 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு கலைக்கப்பட்டது. ராணுவ சட்டம் அறிவிக்கப்பட்டது. ஜெனரல் ஆயுப் கான் ராணுவ சட்டத்தின் நிர்வாகியாக 1958 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
தனக்கு விசுவாசியாக ஆயுப் இருப்பார் என்று அதிபர் மிர்சா கருதினார். ஆனால், ஆயுப் கான் அதிபர் பொறுப்பை கைப்பற்றி ராணுவ ஆட்சியாளராக மாறினார். தனது அதிகாரத்தை வலுவாக்க 1959 ஆம் ஆண்டு ஃபீல்டு மார்ஷல் பொறுப்புக்கு தன்னை உயர்த்திக்கொண்டார். அதன்பிறகு தற்போது தான் ராணுவ தளபதிக்கு பீல்டு மார்ஷல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது முந்தைய சர்வாதிகார போக்கை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications