Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 பஸ்ஸை விட பெரியது.. தலைக்கு மேல் பறக்கும் சிறிய கோள்.. நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: 10 பேருந்துகளை ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பெரிய அளவு இருக்குமோ, அந்த அளவிற்கான சிறிய கோள் ஒன்று நம் தலைக்கு மேல் பறந்து வந்து கொண்டிருக்கிறது. பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் 2013 wv44 என்று அந்த சிறிய கோள் குறித்து நாசா முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் நமது பூமியை நோக்கி நூற்றுகணக்கான விண்கற்கள் வந்துவிட்டு கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதேநேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில் பூமியை நோக்கி 10 பேருந்துகள் அளவு உள்ள 2013 wv44 என்ற சிறிய கோள் வந்து கொண்டிருக்கிறது என்று நாசா கூறியுள்ளது.

இந்த சிறிய கோள் 524 அடி (160 மீட்டர்) விட்டம் உடையது என்று நாசா மதிப்பிடப்பட்டுள்ளது. இது 394 அடி உயரம் உடைய லண்டன் ஐ சின்னத்தை விடவும்,310 அடி உயரம் உள்ள பிக் பென் போன்ற சின்னத்தைவிட மிக அதிகம் உடையது என்று நாசா தெரிவித்துள்ளது.

இதை சிறிய கோள் இன்று நமது பூமிக்கு அருகில் வரும் என்று அறிவிக்கப்படுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 2013 WV44 என்ற சிறிய கோள் வினாடிக்கு 11.8 கிமீ வேகத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 26,000 மைல்களுக்கு மேல் வேகத்தில் செல்கிறதாம். அதாவது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வருகிறது என்று நாசா கணித்துள்ளது.

Asteroid 2013 WV44 is bigger than ten buses, with Earth being its next point of interest

அதேநேரம் இந்த சிறிய கோள் இவ்வளவு வேகமாக வந்தாலும், பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை. நமது பூமிக்கு மேல் குறிப்பிட்ட தூரத்தில் சுற்றும் என்பதே நாசாவின் கருத்தாக உள்ளது. அதாவது நமது பூமியில் இருந்து சுமார் 2.1 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தூரம் நமது சந்திரனை விட ஒன்பது மடங்கு தொலைவில் இருந்தாலும், அது இன்னும் பூமிக்கு அருகில் உள்ள பொருள் (neo) என்ற அடிப்படையில் நாசா இதனை பற்றி தகவலை வெளியிட்டுள்ளது. நாசாவை பொறுத்தவரை, இவை விண்கல்கள் வால்மீன்கள் அல்லது சிறுகோள்களாக இருக்கலாம். இவை அனைத்தும் அருகில் உள்ள கிரகங்களில் ஈர்ப்பு விசையால் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் எச்சங்கள் ஆகும்.

பூமிக்கு அருகில் உள்ள வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் பெரும்பாலானவை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானது போனது வெடித்து போது சிதறிய எச்சங்கள் அல்லது குப்பைகள் என்று நாசா விஞ்ஞானி கூறினார்.

பொதுவாக இதுபோன்ற விண்கற்கள், வால்மீன்கள், சிறு கோள்கள் போன்றவை பூமியின் அருகே வரும் போது கவனம் ஈர்த்தாலும், அதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் பிஹெச்ஏ அளவிற்கு வர வேண்டும். அப்போது தான் அது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

PHA என்று விஞ்ஞானிகள் எதை அழைப்பார்கள் எனறால், ஒரு சிறுகோள் பூமியில் இருந்து 0.05 வானியல் அலகுகளுக்குள் அதாவது 4.65 மில்லியன் மைல்களுக்குள் வர வேண்டும். அந்த விண்கல் அல்லது வால் நட்சத்திரங்கள் 459 அடி (140 மீட்டர்) விட்டத்தை விட பெரியதாக இருக்க வேண்டும்.

இந்த வால்மீன்கள், சிறுகோள்களை அதாவது NEO களை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்களின் பதிவுகளின்படி, நமது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அருகில் 32,254 சிறுகோள்கள் உள்ளன. அவற்றில் 30,000 மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் 10,000 க்கும் அதிகமானவை 460 அடி (140 மீட்டர்) விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் சிறுகோள்கள் 1000 அடி விட்டம் உடையவை என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+