வானத்துல ஓட்டை ஏதும் விழுந்துருச்சா.. கொட்டித் தீர்த்த கனமழை மிதக்கும் நகரங்கள் 18 பேர் பலியான சோகம்
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் தென் கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக 18 பேர் உயிரிழந்த நிலையில் 500 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உணவுக்காக தவித்து வருகின்றனர்
Recommended Video

பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில், பிரேசிலின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். மொத்த பிரேசிலிய மக்கள்தொகை 212 மில்லியனுக்கும் மேலாக உள்ள நிலையில் சுமார் 46 மில்லியன் அங்கு மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாவ்பாவ்லாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் கனமழை
அந்த மாநிலத்தின் தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 11 நகராட்சிகளில் நிலச்சரிவு வெள்ளம் மற்றும் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மரங்கள் விழுந்ததால் மாநிலத்தின் உட்கட்டமைப்பு பலத்த சேதத்தை சந்தித்துள்ளlாகவும் தெரிவித்துள்ளனர் மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரங்களில் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து உள்ளதாகவும் 19 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மழையால் மிதக்கும் நகரங்கள்
ஃபிராங்கோ டா ரோச்சா நகராட்சியில் உள்ள ஒரு காவல் நிலையம் மற்றும் வாய்க்கால் ஆகியவை நிலச்சரிவில் முழுமையாக புதைந்தன. அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து பிரேசில் பல வானிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த மலை செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

ஆளுநர் வருத்தம்
இந்த நிலையில் மழை பாதிப்புகள் குறித்து சாவ் பாலோ கவர்னர் ஜோவா டோரியா ஹெலிகாப்டரை பயன்படுத்தி சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட 10 நகரங்கள் மற்றும் 645 நகராட்சிகளுக்கு உதவ 2.7 மில்லியன் டாலர்களை வழங்குவதாக தெரிவித்தார். இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஜோவ் டோரியா, 'சாவ் பாவ்லாவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மிகுந்த வருத்தத்துடன் பார்வையிட்டு வருகிறேன். உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மீட்பு பணிகள் தீவிரம்
நாங்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவை வளங்களை வழங்க எனக்கு அதிகாரமிருக்கிறது என்றும் கவர்னர் ஜோவா டோரியா கூறியுள்ளார். பிரேசிலில் தென்கிழக்கு பகுதி மாநிலங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications