For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

மொகதீசு: சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே தற்கொலை படை குண்டு வெடிப்பில் சிக்கி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். . அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

At least three person was killed in a car bomb at Somalia

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷுவில் அதிபர் மாளிகைக்கு அருகே சாலையில் இன்று காலை பலத்த சத்தத்துடன் காரில் தற்கொலை படையினர் வைத்த குண்டு வெடித்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்திய மர்மநபர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றனர் ‌

தற்கொலைப்படை தாக்குதல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் 3பேர் பலியாயினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து விசாரணைக்கு சோமாலியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
At least three person was killed and 8 people were injured in a car bomb that exploded Saturday morning near the Somalian presidential palace in Mogadishu, police and hospital officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X