பனியால் ஸ்தம்பித்த அட்லாண்டா: விபத்துகள், காரில் பிரசவம், தூக்கம், பட்டினி
அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பனிப் புயலால் சாலைகளில் விபத்து ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் மணிக்கணக்கில் சாலைகளிலேயே இருந்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில தலைநகரான அட்லாண்டாவில் நேற்று முன்தினம் பனிப்புயல் வீசியது. இருப்பினும் பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
இந்நிலையில் பனிப்புயலால் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலங்கள் வழக்கத்தை விட முன்னரே மூடப்பட்டன. இதையடுத்து அனைவரும் வீடுகளுக்கு கிளம்பினர்.

3 இன்ச் பனி
சாலைகளில் வெறும் 3 இன்ச்சுக்கும் குறைவாகவே பனி இருந்தது. அதனால் சீக்கிரம் வீடுகளுக்கு திரும்பிவிடலாம் என்று நினைத்து அனைவரும் தங்கள் வாகனங்களில் கிளம்பினர்.

விபத்து
நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் வாகன விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்க, மறுபக்கம் ஒரு வாகனத்தின் மீது மற்றொன்று என்று ஏராளமான வாகனங்கள் ஏறி குவியலாக போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது.

காரில் பிரசவம்
போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணிநேரம் அதே இடத்தில் நின்றன. இந்நிலையில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட அவர் தனது கணவர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் உதவியுடன் காரிலேயே பெண் குழந்தையை பெற்று அதற்கு கிரேஸ் என்று பெயர் வைத்தார்.

காரில் தூக்கம்
சுமார் 20 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பலர் காரிலேயே சாப்பிட்டு தூங்கியுள்ளனர். சிலர் கார்களை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். மேலும் சிலர் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இரவை கழித்துள்ளனர்.

ஊழியர்கள்
ஊழியர்கள் பலர் அலுவலகங்களிலேயே இரவு நேரத்தில் தூங்கியுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்கு வெளியே மற்றும் பள்ளி வாகனங்களில் முகாமிட்டனர்.

22 மணிநேரம்
வடகிழக்கு அட்லாண்டாவில் வசிக்கும் அகௌண்ட்ஸ் மேனேஜரான அவெர்ஸ் என்ற பெண் வழக்கமாக 30 முதல் 45 நிமிடத்தில் அலுவலத்தில் இருந்து வீட்டை அடைந்துவிடுவார். ஆனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அவர் 22 மணிநேரம் கழித்து தான் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதிகாரிகளுக்கு திட்டு
பனிப்புயல் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்களா, இப்படி தான் மக்களை தவிக்க விடுவார்களா என்று ஜார்ஜியா ஆளுநர் மற்றும் அட்லாண்டா மேயர் உள்ளிட்ட அதிகாரிகளை மக்கள் சமூக வலைதளங்களில் திட்டிக் குவித்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications