Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோஹிங்கியா விவகாரத்தில் சர்வதேச விசாரணையைக் கண்டு பயமில்லை... மவுனம் கலைத்த ஆங் சாங் சூகி!

ரோஹிங்கியா முஸ்லீம்கள் விவகாரத்தில் சர்வதேச விசாரணையைக் கண்டு பயமில்லை என்று மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நேய்ப்பியிடா : ரோஹிங்கியா முஸ்லீம்கள் விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணையைக் கண்டு பயமில்லை என்று மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சாங் சூகி கூறியுள்ளார். படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடு, இன்றைய இரும்புத் திரை நாடு என்று அழைக்கப்படும் மியான்மரில் 2014 மக்கள்தொகை அடிப்படையில் சுமார் 6 கோடி மக்கள் வாழ்கின்றனர். புத்த மதத்தினரே பெரும்பான்மையாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

மியான்மரின் ரக்கானே மாநிலம் உள்பட சுமார் 50 கிராமங்களில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சிறுபான்மை இன மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் குடியுரிமை கடந்த 1982ல் பறிக்கப்பட்டது. இதனால் இவர்கள் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் தங்களது மத வழிபாடுகளை செய்ய அனுமதியில்லை.

சிறுபான்மை மக்கள்

சிறுபான்மை மக்கள்

உயர் பதவிகள் வகிக்கக்கூடாது ஆசிரியர்களாகவோ, டாக்டர்களாகவே அவர்கள் வரக்கூடாது என்பன உள்ளிட்ட இதர உரிமைகளும் மறுக்கப்பட்டன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினராகவே வாழ்ந்து வரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சம உரிமை வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

ஆட்சியில் ஆங்சாங் சூகி கட்சி

ஆட்சியில் ஆங்சாங் சூகி கட்சி

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து கடந்த 2016ல் ஆங் சாங் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் 80 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. இதனையடுத்து மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூகி செயல்பட்டு வருகிறார்.

ராணுவம் தாக்குதல்

ராணுவம் தாக்குதல்

மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமானது. இந்த மாத ஆரம்பத்தில் இருந்து ரோஹிங்கியா மக்கள் மீது ராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.

இனஅழிப்பு என குற்றச்சாட்டு

இனஅழிப்பு என குற்றச்சாட்டு

இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் எலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பு என்று இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இடம்பெயர்ந்த போதும் உயிரிழப்பு

இடம்பெயர்ந்த போதும் உயிரிழப்பு

மியான்மரில் நடக்கும் தாக்குதல்களுக்குப் பயந்து தரை வழியாகவும், கப்பல் மூலமும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் அண்டை நாடுகளான வங்கதேசம், இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். அகதிகளாக வரும் வழியிலும் ராணுவம் புதைத்து வைத்திருந்த கன்னிவெடியில் சிக்கியும், கப்பல் கவிழ்ந்தும் பலர் உயிரிழந்தனர்.

ஆங் சாங் சூகி குறித்து விமர்சனம்

ஆங் சாங் சூகி குறித்து விமர்சனம்

உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக இடம்பெயரும் விவகாரம் மாறியது. ஆனால் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வீட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடந்த ஆங் சாங் சூகி இது குறித்து தட்டிக் கேட்காதது ஏன் என்று உலக நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சூகி ராணுவத்தின் அத்துமீறலை வேடிக்கை பார்ப்பது ஏன் என்றும் பலர் விமர்சித்தனர்.

முதன்முறையாக பேசிய சூகி

முதன்முறையாக பேசிய சூகி

இந்நிலையில் மியான்மர் நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சாங் சூகி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : பயமும் பிரிவினைவாதமும் தான் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல். மியான்மர் மதம் மற்றும் இன ரீதியாக பிரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

பாதிப்பில்லை

பாதிப்பில்லை

மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் வாழும் 50 சதவீதம் கிராமங்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் எவ்வித பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அங்கு மக்கள் இயல்பாக வாழ்ந்து வருவதை யார் வேண்டுமானாலும் சென்று பார்வையிடலாம்.

ஆங் சாங் சூகி வருத்தம்

ஆங் சாங் சூகி வருத்தம்

மாநிலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் வன்முறைகளாலும் மக்கள் வெளியேறியதும் வருத்தமளிக்கிறது. இங்கிருந்து வெளியேறிய அகதிகளை சரிபார்ப்புக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை


ரோஹிங்கியா விவகாரத்தில் சர்வதேச விசாரணையைக் கண்டு பயப்படவில்லை, என்றும் ஆங் சாங் சூகி கூறியுள்ளார்.
படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+