ஆங் சான் சூகி சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டின் ‘54ம் நம்பர் கதவு’ ஏலம்!
நைப்பியதா: மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகியின் வீட்டு இரும்புக் கதவு ஏலம் விடப்பட உள்ளது.
லண்டனில் இருந்து 27 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மர் திரும்பிய சூகி, தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். சுமார் 15 ஆண்டுகாள் அங்கு அவர் வீட்டுச்சிறை வைக்கப் பட்டார்.
அந்த காலகட்டங்களில் அவ்வப்போது சூகி தனது வீட்டின் முன் உள்ள இரும்பு வாயிற்கதவுக்கு முன் மேஜை போட்டு, அதில் ஏறி உரையாற்றுவதுண்டு. அப்போது அரசின் ஊழல், கல்வித்தரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து சூகி பேசுவார்.

சூகி விடுதலையானதைத் தொடர்ந்து அந்த வீடு பழுது பார்க்கப் பட்டது. அப்போது சூகி உரையாற்றும் அந்த 54 என்ற எண் இடப்பட்ட வாயிற்கதவு தூக்கி கடாசப்பட்டிருந்தது. காயலான் கடையில் அதைக் கொடுத்து விட திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து அந்தக் கதவை சில நூறு டாலர்கள் கொடுத்து சூ நையூண்ட் என்பவர் விலைக்கு வாங்கினார்.
தற்போது, அந்தக் கதவை அவர் ஏலம் விட முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். கதவின் ஆரம்ப விலையாக ஒரு கோடியே 23 லட்சம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகையை சூகியின் 'ஜனநாயகத்துக்கான தேசிய அமைப்பு' (என்.எல்.டி.) கட்சிக்கு ஒரு தலைமைக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கவும் நையூண்ட் திட்டமிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications