ஷாக்கிங்!! அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. சமூக பரவலை உறுதி செய்த ஆஸ்திரேலியா.. பகீர் தகவல்
கான்பரா: உலகெங்கும் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா ஓமிக்ரான் கொரோனாவின் சமூக பரவலை உறுதி செய்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவ 2020ஆம் ஆண்டே முற்றிலுமாக முடங்கிப் போனது.
அதன் பிறகு கண்டறியப்பட்ட வேக்சினால் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.

ஓமிக்ரான் கொரோனா
இந்தச் சூழலில் தான் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் இதனால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள போதிலும், ஏற்கனவே அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது.

ஆஸ்திரேலியா
இதுநாள் வரை வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டுமே பெரும்பாலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனிடையே ஆஸ்திரிரேலியாவில் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமே இவர்கள் 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக பரவல்
அங்குள்ள 2 பள்ளிகள் மற்றும் மலையேறும் பயிற்சி மையம் ஒன்றின் மூலம் இவர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள மற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது, ஆஸ்திரேலியாவில் நியூ சவுதி வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 15 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த விமானம் மூலம் இவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் காலத்தில் மேலும், அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த ஓமிக்ரான் புதிய வகை கொரோனா என்பதால் இது குறித்துக் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள உலகெங்கும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video

ஏன் ஆபத்து
முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா குறித்துக் கண்டறிய சில வாரங்களாவது ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications