இந்திய வீரர்களுடன் சேர்ந்து ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்ட சீன வீரர்கள்.. எல்லையில் நடந்த சுவாரசியம்
பீஜிங்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், அசல் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய - சீன வீரர்கள் சேர்ந்து ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மூன்று ஆண்டுகளாக முழு வீச்சில் நடைபெற்றது. கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் விறு விறுப்பாக நடந்து வந்தது.

நாகரா பாணியில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது. கலை நயத்துடனும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தாக்குப்பிடிக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், நேற்று நண்பகல் 12.20 மணிக்கு பால ராமருக்கு பிராண் பிரதிஷ்டை நடைபெற்றது. அயோத்தி கோயில் கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. மத்திய அரசு அலுவலகங்களில் நேற்று அரை நாள் விடுமுறை விடப்பட்டு இருந்தது
சீன ராணுவ வீரர்கள்: ரயில் நிலையங்களில் உள்ள திரைகளில் அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல இடங்களில் ஜெய்ஸ்ரீராம் என கோஷத்துடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவ வீரர்களுடன் சேர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஜெய்ஸ்ரீராம் என கோஷம்: இணையத்தில் பரவும் இந்த வீடியோவில், ஜெய்ஸ்ரீராம் என சொல்லுவது எப்படி என்று சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய வீரர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். உடனடியாக இதைக் கற்றுக் கொள்ளும் சீன வீரர்கள் ஜெய்ஸ்ரீராம் என சொல்கின்றனர். உடனே உற்சாகம் அடைந்த இந்திய வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.
வரவேற்புக்குரியது: இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் சீன வீரர்கள், இந்திய வீரர்களுடன் சேர்ந்து ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்புவது நல்லிணக்கத்தை காட்டும் விதமாக இருப்பதாக கூறியுள்ளனர். எல்லையில் பதற்றம் நிலவினாலும் சீனா வீரர்கள் நட்புணர்வுடன் நடந்து கொள்வது வரவேற்புக்குரியது என்றும் சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications