முஸ்லீம்கள் வசமாகும் ரோம்... ஒபாமவே அமெரிக்காவின் கடைசி அதிபர்... பரபரப்பைக் கிளப்பும் பாபா வங்கா!
டெல்லி: பாபா வங்கா.. உலகின் கவனத்தை ஈர்த்துள்ள பல்கேரியப் பெண். அப்படி என்ன செய்து விட்டார் இவர்.. நம்ப முடியாத பல கணிப்புகளை இவர் கூறியதுதான் இவர் மீது கவனம் திரும்ப முக்கியக் காரணம். நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை இவர் கூறியுள்ளார். அதில் பல உண்மையாகவே நடந்துள்ளது என்பதுதான் முக்கியமானது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பிறப்பு, 2004ல் ஏற்பட்ட சுனாமி, உலக வெப்பமயமாதல் உள்பட பல முக்கிய நிகழ்வுகளை இவர் முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளார்.
இவர் கூறியுள்ளதில் இரண்டு விஷயங்கள்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.. ஒன்று, 2043 ம் ஆண்டு வாக்கில் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமியக் குடியரசு உருவாகும். இரண்டாவது, 2130ம் ஆண்டு வாக்கில் வேற்றுகிரகவாசிகளுடன் உதவியால் மனிதர்கள் தண்ணீருக்குக் கீழே வாழ ஆரம்பிப்பார்கள் என்பது.

பல்கேரிய பாபா
பல்கேரியாவைச் சேர்ந்தவர் இந்த பாபா வங்கா. இவர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்துக் கூறுவார். இவருக்கு பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என்ற செல்லப் பெயரும் உண்டு.

வெஞ்செலியா பண்டவா டிமிட்ரோவா
இவரது இயற்பெயர் வெஞ்செலியா பண்டவா டிமிட்ரோவா என்பதாகும். இவர் தனது 12 வயது வரை எல்லோரையும் போலத்தான் வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பின்னர் இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் வந்தது.

கண் பார்வை பறிபோனது
12 வயதில் இவருக்கு கண் பார்வை பறி போனது. மிகப் பெரிய சூறாவளியால் இவரு பார்வை பறி போனதாக சொல்கிறார்கள். ஆனால் இவருக்குப் பார்வை எப்படிப் பறி போனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

கண்கள் மூடிய நிலையில்
சூறாவளி இவரது ஊரை சின்னாபின்னமாக்கி விட்டது. குடும்பமே பிரிந்து போனது. பல நாட்களுக்குப் பிறகுதான் வெஞ்செலியாவை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அப்போது இவரது கண்கள் மூடி சீல் வைக்கப்பட்டது போல இருந்தது.

காலத்தைக் கணிக்க ஆரம்பித்தார்
அதன் பின்னர் வெஞ்செலியா எதிர்காலத்தைக் கணித்துக் கூற ஆரம்பித்தார். என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் கூற ஆரம்பித்தார். இது பலருக்கு வியப்பளித்தது. பலரின் பிரச்சினைகளையும் அருள் வாக்கு கூறி தீர்த்து வைத்தார் வெஞ்செலியா.

பார்க்க வந்த ஜார் மன்னர்
இவருக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போரின்போது பல்கேரிய ஜார் மன்னர் 3ம் போரிஸ் இவரைப் பார்த்து அருள் வாக்கு கேட்டதாக சொல்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர்களையும் விடவில்லை+
இவரது சிறப்பை அறிந்த பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இவரிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து வந்தனர். சிலர் தங்களது சுயநலனுக்காக இவரை பயன்படுத்திக் கொண்டார்களாம்.

50 வருடம்
பாபா வங்கா கிட்டத்தட்ட 50 வருட காலம் இப்படிக் கணிப்புகளை கூறி வந்துள்ளார். இவருக்கு பால்கன் நாஸ்ட்ரடாமஸ் அல்லது பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயரும் வந்தது.

உருவம் இல்லாத மனிதர்கள்
உங்களுக்கு எப்படி எதிர்காலத்தைக் கணித்துக் கூற முடிகிறது என்று இவரிடம் கேட்டால், உருவம் இல்லாத சில மனிதர்கள் தனக்குத் தகவல் தருவதாகவும் அதை வைத்தே தான் கணித்துக் கூறுவதாகவும் கூறியுள்ளார் இவர்.

சுனாமியைக் கணித்தவர்
இவர் 2004ம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமியை முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம். மேலும் உலக வெப்பமயமாதல் குறித்தும் இவர் கூறியுள்ளாராம்.

செப்டம்பர் 11 தாக்குதல்
அதேபோல நியூயார்க்கில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலையும் இவர் முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம். இரும்புப் பறவைகள் வந்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும். அப்பாவி ரத்தங்கள் மண்ணில் சிந்தும் என்று அவர் கூறியுள்ளாராம்.

ஒபாமா குறித்தும்
இவர் அமெரிக்காவின் 44வது அதிபராக ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் பதவியேற்பார் என்று கணித்துக் கூறியுள்ளார். அதன்படியே ஒபாமா அதிபரானார். அவர் அவரே கடைசி அமெரிக்க அதிபராகவும் இருப்பார் என்று அவர் கூறியுள்ளதுதான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு யுத்தம் வெடிக்கும்
2010 - 2016 ஆண்டுகளுக்கு இடையே அணு யுத்தம் வெடிக்கும் என்றும் ஐரோப்பாவே காலியாகி விடும் என்றும் இவர் கணித்துக் கூறியுள்ளார். இது நிறைவேறுமா என்பதை அறிய இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

2130ல் தண்ணீரில் மனிதன்
2130ம் ஆண்டு வாக்கில் மனிதர்கள் தண்ணீருக்கு அடியில் வசிக்க ஆரம்பிப்பார்கள் என்றும் இவர் கணித்துள்ளார். இதற்கு வேற்றுகிரகவாசிகள் உதவி செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

3005ல் செவ்வாயில் போர் வெடிக்கும்
3005ம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்தில் பெரிய போர் வெடிக்கும் என்றும் இவர் கணித்துள்ளார். இதுதான் பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது.

1996ல் மரணம்
இவர் கடந்த 1996ம் ஆண்டே மறைந்து விட்டார். ஆனால் ஐஎஸ்ஐஎஸ் பிறக்கும் என்று இவர் கூறியதுதான் இப்போது மீண்டும் இவரது பெயர் பரபரப்பாக அடிபட முக்கியக் காரணமாக உள்ளது.

இஸ்லாமியக் குடியரசு உருவாகும்
இதுகுறித்து அவர் கூறுகையில், உலக இஸ்லாமியர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஐரோப்பாவில் முஸ்லீம் போர்க்குழு ஊடுறுவும். ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 2043ம் ஆண்டு வாக்கில் புதிய குடியரசை அவர்கள் நிர்மானிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் பிறப்பைத்தான் இவ்வாறு பாபா வங்கா கூறியுள்ளார் என்று சொல்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications